மலையக மக்களுக்கு இந்திய அரசு விடுத்த நற்செய்தி…
இலங்கை மலையக வாழ் மக்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் மலையக மக்களுக்காக சுமார் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களுக்காக கொடுக்கப்பட்ட உள்ளதான தகவல்களினை இந்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து தற்போது இருக்கின்றார்.
இன்றைய தினம் கொழும்பில் நடத்தப்பட்ட மலையகம் 200 எனப்படுகின்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடுகையிலே இதனை குறிப்பிட்டு இருக்கின்றார்.
குறித்த நிகழ்வானது மலையக மக்களின் இருநூறு வருட வாழ்க்கையினை கௌரவப்படுத்தும் முகமாக நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமை தாங்கி குறித்த நிகழ்வினை முன்னெடுத்துள்ளார்.
மற்றும் இந்திய நிதி அமைச்சர் குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மலையக வாழ் மக்களின் மறுவாழ்விற்கென சுமார் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றது .
இச் செய்தியானது மலையகவாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்திகளில் ஒன்றாக தற்போது பார்க்கப்படுகின்றது.