இலங்கை முழுவதும் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த இளைஞன் காரணம் தெரியுமா?
இலங்கை ஐ சேர்ந்த புத்தளம் மாவட்டத்தில் வாசித்து வருகின்ற ற இளைஞன் ஒருவரே இலங்கை முழுவதும் சைக்கிள் பயணம் ஒன்றை மேற் கொண்டு உள்ளார்.
இவர் நேற்று 15 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் இச் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து உள்ளார் .இவரது பெயர் எல். ஏ .என்.நப்ஸ்தான் .
இவருக்கு தற்போது 31 வயது ஆகின்றது. மேலும் இவர் புத்தளத்தின் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர்.
மேலும் இவர் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றி வருவதாக தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து உள்ளார் .இலங்கை யில் சுமார் 25 மாவட்டங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
இலங்கை சுற்றி இப் பயணதிற்க்கான காரணம்…
இப் பயணத்தி இற்கான காரணத்தை ஆராகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள போதை பொருள் பாவனையின் ஒழிப்பு மற்றும் போக்குவரத்தில் கவனம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற மூன்று விடயங்களை கவனத்தில் கொண்டு இச் சைக்கிள் சுற்று பயணத்தை ஆரம்பித்து உள்ளார் இவர் .
புத்தளம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வருகின்ற போதை பொருளின் பாவனை ஆல் பல . குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன இதனையும் மற்றும் இலங்கையில் அதிக அளவில் நடைபெறுகின்ற வாகன விபத்து இணையும் ,
மேலும் இலங்கை இன் முக்கிய வருவாயாக அமைந்து உள்ள சுற்றுலாத் துறையில் வெளிநாட்டவர்களின் ஈர்ப்பை அதிகப் படுத்துவதற்காகவும் இவர் இச் சைக்கிள் பயணத்தை முன்னெடுத்து உள்ளார்.
இதுவே இவரின் கோரிக்கையாகவும் அமைந்து உள்ளது. மேலும் இச் சைக்கிள்
பயணம் குறித்து மேலும் அறிகையில் ;
குறிப்பிட்ட இளைஞன் தனது சைக்கிளின் முன் புறத்தில் ஒரு விளம்பர பத்தாதை ஒன்றை ஒட்டியு உள்ளார்.
இலங்கை முழுவதும் சைக்கிள் பயணம் என்ற தலைப்பிலும் மற்றும் போதை ஒழிப்பு ,கவனமாக ஓட்டவும் ,இலங்கைக்கு வருகை தரவும் என்ற உப தலைப்புகளை கொண்டதாகவும் வலது பக்கம் இலங்கையின் வரைபடத்தை அமைந்ததாகவும் மற்றும் அவரது தொலைபேசி இலக்கம் facebook id என்பவற்றை காட்சிப் படுத்தியும் பதாதை ஒன்றினை காட்சி படுத்தி உள்ளார் .
உண்மையில் இவ் இளைஞன் குறிப்பிட்ட மூன்று முக்கிய விடயங்களும் இலங்கையில் கருத்தில் கொள்ளக்கூடிய விடயங்கள் ஆகும் .
ஏனென்றால் தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதை பொருள் மாபியா பல்வேறு விதத்திலும் சிறுவர்களையும்,
மற்றும் இளைய சமுதாயத்தினரையும் எதிர்கால சமுதாயத்தையும் முற்று முழுதாக அடிமையாக்கி வருகின்ற ஒன்றாக அமைந்து உள்ளது .
அதிலும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் இப் போதை பொருள் பாவனை அதிகரித்து உள்ளது . இப் போதைப்பொருள் பாவணையாளர்கள் இன் அத்து மீறிய செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன .
மேலும் வாகன விபத்து எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் வாகன விபத்து என்பது இலங்கையில் அரிதாக நடைபெற்றாலும் தற்போது நிமிஷத்துக்கு அதிகளமான வாகன விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது .
அது மட்டும் இல்லாது இதனால் ஒரு தவறும் இழை க்காத நபர்களும் பாதிப்பில் சிக்கிக் கொள்கின்றனர்.
வீதி வீதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதன் மூலம் இத்தகைய வாகன விபத்துகளை நாம் முற்றிலுமாக குறைக்கலாம் என்பதும் நாம் அறிந்ததே .
மேலும் இலங்கையின் முக்கிய வருவாயாக அமைந்துள்ள சுற்றுலா துறையின் மேம்படுத்துவது இலங்கையர்களாகிய நமது கடமையாகும்.
எனவே அரசாங்கம் இது குறித்து மேலும் ஆராய்ந்து சுற்றுலாத்துறை எவ்வாறு விரிவு படுத்தலாம் என்பதற்குரிய ஆலோசனைகளையும் மற்றும் அதற்குரிய தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு சுற்றுலாத்துறையை விரிவு படுத்த வேண்டும்.