Srilanka News

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி குறித்து ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு…

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் குறித்த வழக்கு விசாரணையை மேற்கொண்ட முல்லைத் தீவு மாவட்டத்தின் நீதிபதியான சரவணராஜா அவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிய தகவல் ஆனது நீதித்துறைக்கே நீதி இல்லை… என்ற பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஆளான ஒரு விடயமாகப் பார்க்கப்படுகிறது.

குறித்த நீதிபதியான சரவணராஜா அவர்கள் பதவி விலகியதற்குரிய முழுமையான காரணங்கள் விசாரிக்க கோரி தற்போது நாட்டின் ஜனாதிபதியான ராணில் விக்கிரமசிங்க அவர்கள் உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க என்பவருக்கு குறித்த ஜனாதிபதியின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோரியோ அல்லது நீதி சேவை ஆணைக் குழுவிற்கு நீதிபதி சரவணராஜா அவர்கள் எவ்வித அறிவித்தலினை வழங்காத காரணத்தினாலே ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் நீதிபதியான சரவணாராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கியமான காரணம் குருந்தூர் மலை விவகாரம் குறித்து தனக்கு பல்வேறு விதமான கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல் என்பனவே என பல்வேறு ஊடகங்களில் வெகுவாக குறித்த தகவல் பரவி வருகின்றது.

இதனால் தன்னுடைய உயிரிற்கு உத்தரவாதம் இல்லை என்றே நீதிபதி அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இச் சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பாக இலங்கையில் பேசப்பட்டு வருகின்றது.

குறித்த நீதிபதியவர்கள் கடந்த 24 ஆம் தேதி வெளிநாடு சென்றுவிட்டார். கடந்த 23ஆம் தேதி திகதி அளவில் நீதி சேவை ஆணை குழுவிற்கு தனது பதவி விலகல் குறித்து பதவி விலகல் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தரப்பினார் தற்போது தெரிவித்துள்ளனர்.

நாட்டை விட்டு

நீதி அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி அவர்கள் தற்போது கலந்துரையாடி உள்ளத்துடன் இவ் விடயம் தொடர்பாக மேலதிக விபரங்களை சேகரிக்க கூறியுள்ளார்.

Related Articles

Back to top button