போதை மாத்திரைகள் உடன் கைதான மாணவன்!!. யாழில் நடந்த சம்பவம்!!!
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்த போதை மாத்திரைகள் பாவனையின் காரணமாக பல்வேறு விதமான எதிர்வலைகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் போதை பொருள் மாத்திரையுடன் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்த நபரிடமிருந்து 55 தடை செய்யப்பட்ட லேகிய போதை பைகளும் மற்றும் அதனை தொடர்ந்து 11 போதை மாத்திரைகளும் கிடைக்கப்பெற்ற்றுள்ளது .
குறித்த யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஆனவர் தங்கியிருந்த வாடகை அறையில் மேற்குறிக்கப்பட்ட போதை லேகியங்களும், போதை மாத்திரைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் போலிசாரின் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 23 வயது பல்கலைக்கழக மாணவனின் வாடகை அறைக்கு சென்று சோதனை செய்த போதே மேற்கூறப்பட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது .
மற்றும் குறித்த மாணவனுக்கு எதிராக கோப்பாய் போலீசார் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இக் குற்றம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்து மற்றும் இது தொடர்பில் யாரேனும் பின்னணியில் இருக்கிறார்கள் எனும் நோக்கில் விசாரணைகளும் செய்யப்பட்டு வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.
விற்பனை செய்யும் நோக்கோடு இவ்வாறு கைவசம் வைத்திருந்த போதை மாத்திரைகள் குறித்த மாணவரிடமிருந்து கைப்பற்ற பட்டமையும் குறிப்பிடத்தக்கது.