போலி ஆவணங்கள் மூலம் ஐரோப்பாவிற்கு செல்ல ஆர்வம் காட்டும் தமிழர்கள்…. விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்!!! வெளியான தகவல்கள்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்த வாழ்க்கை செலவினங்களினால் பெரும்பலமான மக்கள் இலங்கையினை விட்டு ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது அனைவரும் அறிந்ததே இந்த வருடத்தில் இலங்கையின் வட மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் பலர் போலி ஆவணங்கள் மூலம் ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சிகளை எடுத்தது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.
அதற்கமைய உண்மையில் இதுவரை இவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்குரிய பத்து முயற்சிகள் காட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகழ்வும் எல்லை கட்டுப்பாட்டு பிரிவில் செயல்படுகின்ற அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது.
மற்றும் இவ்வாறு போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்று வடமாகாணத்தினை சேர்ந்த தமிழர்கள் பலர் தோஹா மற்றும் துபாய் ஆகிய குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு மோசடியான முறையில் போலி ஆக அச்சிடப்பட்ட விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை பிரஜையான இருப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் குறித்து இரு பெண்களும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண பெண்கள் என கட்டுநாயக்காவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தகவலினை வெளியிட்டுள்ளனர்.