Srilanka News

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 28 நபர்கள் வெளியான தகவல்….

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சுமார் 28 நபர்கள் அனைவரும் குவைத்தில் சட்ட விரோதமாக குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக விசா இன்றி தங்கி இருந்த நபர்கள் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு வீட்டு வேலைக்காக பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த வீட்டு பணியாளர்கள் சுமார் 28 பேரை அதில் 24 பெண்களும் நான்கு ஆண்களுமாக 28 பேரும் இன்று அதிகாலை ஆறு முப்பது மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வழியாக குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.

வந்திருந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் இவ்வாறு சட்ட விரோதமாக தங்கி இருந்து தற்போது இலங்கை நாட்டிற்கு திருப்தி அனுப்பப்பட்டவர்களில் அநேகமானவர் அனுராதபுரம் மற்றும் பொலனருவை மாவட்டங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக குவைத் இல் தங்கி இருந்து பின்னர் குவைத் இல் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த குழு ஒன்று எனவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நாடு கடத்தப்பட்டவர்களை குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து கலந்தாலோசித்து இந்த குழுவினரை தற்போது இலங்கைக்கு நாடு கடத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button