மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள்… சிக்கி தவிக்கும் அபாயம்!!!
இலங்கையர்கள் பலர் மியன்மாருக்கு கடத்தப்பட்ட நிலையில் அங்கு சிக்கி தவிப்பது தொடர்பான தகவல்கள் அண்மை காலங்களில் பரவி இருந்தது.
இந்த நிலையில் குறித்த இலங்கையர்களை பாதுகாப்பாக மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்குரிய திட்டங்களை இலங்கை அரசாங்கமானது மியான்மார் அதிகாரியிடம் வலியுறுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று வரை மியன்மாருக்கு பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் இவர்களை மீட்பதற்கு இலங்கை தூதரகமானது மியான்மார் அரசாங்க அதிகாரிகளிடம் பல்வேறு விதமான முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கும் 2003 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சுமார் 32 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சுமார் 56 இலங்கையர்கள் மியன்மார் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உம் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இலங்கையர்கள் பலர் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி வேலை விசாக்கள் இன்றி மற்றும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுற்றுலா விசாவை பயன்படுத்தி செல்கின்றனர்.
இந் நிலையில் இவ்வாறு செல்கின்ற நபர்களை அதிக சம்பளம் வாங்குவதாக கூறிய மற்றும் ஆட்கொடத்தில் தொடர்பான குற்றவியல் செயல்பாடுகளுக்கு கீழ் அவர்களை மியன்மாரில் தடுத்து வைத்துள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் ஆனது தெரிவித்திருக்கின்றது.