Srilanka News

இலங்கை நாட்டைச் சுற்றி விசேட பாதுகாப்பு…போலீஸ் உத்தியோகத்தர் அறிவித்த அறிவிப்பு…

இலங்கை நாட்டைச் சுற்றி நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் தற்போது போலீஸ்சார் ஈடுபட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது நேற்று தொடங்கிய சுமார் நான்கு நாட்கள் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையின் நான்கு தினங்கள் கொண்ட நீண்ட வார இறுதி விடுமுறை சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்ற இலங்கையர்கள் போக்குவரத்துக் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் கோரிக்கையினை பொது மக்களுக்கு விடுத்துள்ளார் .

மேலும் இவ்வாறு நேற்று போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது இவர் குறித்த தகவலினை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மற்றும் நாட்டில் ஏற்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் எப்போதும் ஆயத்தமாக இருப்பதாக குறித்து சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் ,ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமாயின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவலினை வழங்குமாறும் குறித்த போலீஸார் தனது ஊடகவியல் சந்திப்பின்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வருகின்ற வார இறுதியில் நீண்ட விடுமுறையாக இதை பார்க்கப்படுகின்றது .

எனவே மக்கள் விடுமுறையை கழிப்பதற்கு போக்குவரத்து பயணங்களில் ஈடுபடுவார்கள் எனவும் இதனால் அதிக வீதி விபத்துக்கள் நடைபெறுவதாகவும் இதனால் மக்கள் சற்று இது குறித்து அவதானமாக இருக்குமாறு தெரிவித்திருக்கின்றனர்.

இதனாலேயே இலங்கை நாட்டைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

Related Articles

Back to top button