கனடாவில் இந்து கோவில்கள் சேதம் !அதிகரிக்கும் பயங்கரவாதிகள்….
கனடாவில் ஒட்டாவா என்னும் நகர பகுதியில் இன்று பயங்கரவாதிகளினால் இந்து கோவில் ஒன்று சேதமாக்கப் பட்டுள்ளது . ஒட்டாவா என்னும் நகரமே கனடா வின் தலைநகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது .
மேலும் இந்த தலைநகரப் பகுதி ஒன்டாரியோ மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
இங்கு இந்து கோவில்களில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருகின்றது .அவ் வகையில் கனடா நாட்டு உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் உள்ள முக்கிய கோவில் ஆன லட்சுமி நாரயனார் கோவிலினை பயங்கர வாதிகள் சேதப்படுத்தி உள்ளனர்என்று செய்தி வெளியிட்டு இருந்தனர் .
மேலும் இத்தகைய சேதத்தை இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் ஆதரவு ஆன பயங்கரவாதிகள் இருவரினால் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
இதன் போது கோவிலினை சேதப்படுத்திய பின் இரு பயங்கர வாதிகளும் போஸ்டர் ஒன்றினை கோவிலின் முன் புறப் பகுதியில் ஒட்டி உள்ளனர் .அப் போஸ்டரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது .
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட பட்டு இருந்தது .
மேலும் கனடாவில் இந்து கோவில்கள் பயங்கர வாதிகளினால் தாக்கப்படுவது இதோடு 4வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது .