World

பிரித்தானியாவிற்கு சுற்றுலா மற்றும் கல்விக்காக செல்பவருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!!

பிரித்தானியாவிற்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வதற்கு என செல்வோருக்கான விசா தொடர்பாக தற்போது அந் நாட்டு அரசாங்கம் அறிவித்ததாவது ;

குறித்த விசா கட்டணங்கள் ஆனது தற்போது அதிகரித்துள்ளதாக அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அவ் வகையில் கூடுதலாக ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்குரிய விசாவின் பணமானது 15 பவுண்டுகளால் உயர்த்தப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 6000 ரூபாய் ஆகும் .

மேலும் கல்விக்காக வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மாணவர்களுக்கு உரிய விசாவானது முன்பிருந்த விசா கட்டணத்தை விட கூடுதலாக 127 பவுடுன்கள் அதாவது இலங்கை மதிப்பில் 50 ஆயிரத்து 700 ரூபாய் வாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு வெளியே கல்வி கற்பதற்காக விண்ணப்பிப்பதற்குரிய சர்வதேச மாணவர்களுக்கு உரிய விசா கட்டணம் ஆனது சுமார் 490 பவுண்டுகளாகவும் மேலும் சுற்றுலா விசாவானது 115 பவுண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசா கட்டணம்..

மேலும் அனேக சர்வதேச சுற்றுலா பயணிகளையும் மற்றும் பெரும்பாலான சர்வதேச மாணவர்களையும் வருடா வருடம் உள்வாங்கும் இங்கிலாந்தில் தற்போது கல்வி கற்பதற்குரிய விசாவானது 20% இனாலும் ,

மேலும் வேலை மற்றும் சுற்றுலாவுக்காக எடுக்கப்படும் விசாவானது 15% இனாலும் அதிகரித்து உள்ளதாக பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதிகரிக்கப்பட்ட கட்டண விசாவிற்கான உயர்வானது அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் நான்காம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் அதிக மாணவர்களை உள்வாங்கும் இங்கிலாந்து ஆனது இவ்வாறு தனது விசாவின் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் இச் சம்பவமானது;

பிற நாடுகளில் இருந்து முக்கியமாக இலங்கை இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கல்வி பயில்வதற்காக ச செல்லவிருக்கும் சர்வதேச மாணவர்களுக்கு பேரிடியாக வந்த அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.

அக்டோபர் மாதத்தின் பிறகு பிரித்தானியாவிற்கு சென்று கல்வி பயில எண்ணி இருக்கும் மாணவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிய வருகின்றது.

Related Articles

Back to top button