Srilanka NewsWorld

மலேசியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள் கொலை தொடர்பான விசாரணைகள் தீவிரம்


மலேசியாவில் சென்தூல் எனப்படும் பகுதியில் சுமார் மூன்று இலங்கையர்கள் மர்மமான முறையில் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் தமிழ் உள்ளூர் ஊடகங்கள் தற்போது தகவலினை வெளியிட்டுள்ளது.

அந் நிலையில் இம் மூவரையும் கொலை செய்த நபர்களும் இரண்டு இலங்கையர்கள் என போலீசார் தற்போது தகவலினை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த கோலாலம்பூர் போலீசார் குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களும் சுமார் 20 தொடக்கம் 40 வயதான வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மலேசியாவின் செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிகளுக்கு சொந்தமான கட்டடத்தில் இருந்தே மூன்று சடலங்களும் மீட்கப் பட்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இக் கொலை சம்பவமானது கடந்த 22 ஆம் தேதி அளவில் நடை பெற்றுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

மற்றும் மலேசியாவில் குறித்த வீட்டில் வாடகைக்காக தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் மற்றும் அவருடன் இணைந்து இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கொடூரமாக ,

கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகத்தினை மூடி சந்தேக நபர்கள் கொலை சம்பவத்தை நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ் விசாரணையின் தெரியவந்ததாவது ; இக் கொலை சம்பவம் நடைபெற்ற இரு தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டிக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்ததாக தெரிகின்றது,

மேலும் மூவரையும் கொலை செய்துவிட்டு உடனடியாக தப்பி சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கோலாலம்பூர் போலீசாரினார் குறித்த இரண்டு நபர்களின் புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு பொது மக்களிடம் இவ் விசாரணை குறித்து உதவி கோரி உள்ளனர்.

மலேசியாவில்

Related Articles

Back to top button