ஐரோப்பாவிற்குள் புலம்பெயர முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி….. வெளியான திடுக்கிடும் அவல நிலை!!!!
தற்போது உலக நாடுகளில் நடைபெறுகின்ற யுத்த சூழல் காரணமாகவும் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பல்வேறு வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாடுகளை விட்டு ஐரோப்பாவிற்குள் புலம் பெயர ஆயத்தமாக இருக்கின்றனர்.
இந் நிலையிலே ஸ்பெயின் நாட்டின் கடற்கரைப் பகுதியில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அகதிகளில் நான்கு அகதிகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஸ்பெயின் நாட்டின் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
32 அகதிகளுடன் ஐரோப்பாவிற்குள் புலம்பெயர்ந்த நபர்களில் நான்கு பேர் பரிதாபகரமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தற்போது போலீசார் தங்களுடைய ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்து இருக்கின்றனர்.
மற்றும் குறித்த புலம்பெயர் நடவடிக்கைகளின் போது புலம்பெயர்ந்தவர்களில் மேலும் நான்கு பேர் மயக்க நிலையில் காணப்பட்டதாகவும்,
அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
மற்றும் ஸ்பெயினில் இவ்வாறு இவ் வருட ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இடையில் சுமார் 13000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் அதாவது ஸ்பெயின் நிலப்பரப்புக்குள் வந்து தஞ்சம் புகுந்துள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இவ்வாறு நாடு கடந்து புலம்பெயர்கின்ற நபர்களின் எண்ணிக்கை ஆனது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் பலர் இன்று வரை காணாமல் போயுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எனவே பாதுகாப்பான கடல்வழிப் பிரயாணங்கள் மூலமே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள கூடியதாக உள்ளது.