Srilanka News

இந்தியா வசமாகும் இலங்கையின் திருகோணமலை!! கொந்தளிக்கும் மக்கள்…..

திருகோணமலை இனை தன் வசப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் இந்தியா.

ரணில் இந்தியாவிற்கு இதனைபத்திரப் பதிவு செய்து கொடுப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறது ஆக மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் ஆன வசந்த முதலிக்கே என்பவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் இவர் இலங்கையில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரியப் படுத்தி உள்ளார்.

சுமார் 624 சதுர மயில் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்வதாகவே இது தெரிய வருகின்றது.

மேலும் இதற்கு ரனில் அவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது . மேலும் மோடியுடன் இது தொடர்பு ஆன பேச்சு வார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும் தெரிகின்றது .

இதனால் மேலும் இந்தியாவுக்கு பத்திர பதிவு செய்ய உள்ள பகுதியை சூழ சுமார் 35 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவது ஆகவும் இதனால் இவர்களை அகற்றுவது தொடர்பாக அவ்வூர் அபிவிருத்தி சங்கங்கள் கதைத்து வருவதாகவும் தகவல்கள் வெளி ஆகி உள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய சொத்துக்களில் ஒன்று தான் திருகோணமலை துறைமுகம்.

ஏனெனில் அதில் காணப்படும் இயற்கையான துறைமுகம் அமைந்து உள்ள விதம் எல்லா நாட்டவர்களையும் ஈர்த்த வண்ணம் தற்போது வரை இருந்து வருகின்றது.

ஏன் திருகோணமலையை இந்தியா பத்திரப் பதிவு செய்கிறது ??

திருகோணமலை துறைமுகம் ஆனது ஐந்தாவது பெரிய இயற்கை துறை முகமாகும். மேலும் இது ஆழ்கடல் துறைமுகம் ஆகும் .

இதனால் பல்வேறு நாடுகளும் இதனை கைப்பற்றுவதில் ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

இதிலிருந்து பல நாடுகளுடன் வர்த்தகங்களை ஈடு படுத்திக் கொள்வது இலகுவான ஒரு செயலாகவே இருந்து வருகின்றது.

மேலும் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தின் அமைவிடம் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் கூட நான்கு பாதுகாக்கப் படுகின்றதாகவும்.

மேலும் வடகிழக்கு கடுமையான பருவ மழையின் காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளும் இத் துறைமுகத்தில் குறைவாக இருக்கின்றது எனவும் தெரிய வருகின்றது.

இது பாரிய கப்பல்களை இயக்குவதற்குரிய ஒரு முக்கிய இடமாகவும், ஆழமான நீரையும் கொண்டதாகவும் இது காணப்படுவதனால் இதனை அதிக நாட்டவர்கள் விரும்புகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இதில் பரந்த கடல் பரப்பையும் கொண்டி ருப்பதினால் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குரிய சகல வசதிகளும் இருப்பதாகவும் தெரிகின்றது .

இலங்கையின் தலை நகரான கொழும்பு துறைமுகத்தை விட நீர் மற்றும் நில வசதிகள் அதிகமாக சுமார் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.

மேலும் இதன் மூலம் கப்பல்களை பாதுகாத்துக் கொள்வது இலகு வாக்கப்படுகின்றது எனவும் தெரிய வருகின்றது.

அனேகமான கப்பல்கள் பழுது பார்க்கும் இடமாக பரந்த பரப்பைக் கொண்டிருப்பதனால் பழுது பார்க்கும் முக்கிய இடமாக இது செயற்பட்டு வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி எவ்வாறு சீனாவிற்கு கையளிக்கப்பட்டதோ அதே போல் முக்கிய துறைமுகம் ஆன திரிகோணமலை துறைமுகத்தின் ஒரு பகுதியானது இந்தியாவுக்கு கையளிக்கப் பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் அப் பகுதியைச் சேர்ந்த 35,000 குடும்பங்கள் அகற்றப்பட திட்டமிடப்பட்டு உள்ளனர்.

Related Articles

Back to top button