சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை!!!இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை…
தற்போது இலங்கையில் அதிகமாக டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு விதமான சுவாச தொடர்பான நோய்களும் பரவி வருவதாக சுகாதாரத் துறையானது தற்போது தெரிவித்து இருக்கின்றது.
இந் நிலையில் இலங்கையைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இது குறித்து சற்று அவதானமாக செயல்படுமாறும் சுகாதாரத்துறை வட்டாராம் இலங்கை பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
அந் நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கும் இலங்கை மக்களில் பலர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர் எனவும்,
மற்றும் சுவாச தொடர்பான வைரஸ்களினாலும் பாதிக்கப்பட்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
அதனை தொடர்ந்து அதிக காய்ச்சல் மற்றும் இருமலுடன் கூடிய டெங்கு நோய் தற்போது பரவுகின்ற படியினால் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
சாதாரண காய்ச்சல், சளி என பொருட்படுத்தாமல் விடாமல் இது குறித்து முன்கூட்டியே வைத்திய ஆலோசனையினை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என சுகாதாரத் துறையானது தற்போது மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி இன்றைய தினங்களில் அதிகமாக பரவுகின்ற டெங்கு நோயாலர்களுக்கு சிறிதளமான இரும்பல்,
மற்றும் தொண்டையில் அசௌகரியங்களும் ஏற்பட்டு சில சமயங்களில் மூக்கில் சளியுடன் கூடியதாகவும் காணப்படுகின்றதாக சுகாதாரத்துறை தற்போது தெரிவித்திருக்கின்றது.
எனவே ஆரம்பத்தில் சளி, காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை தற்போது தெரிவித்திருக்கின்றது.
மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் என பொருட்படுத்தாமல் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பின்னர் வீடு முழுவதும் உள்ள நபர்களுக்கு பரவிய பின்னரே சிலர் இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றனர் எனவும் இது முற்றிலும் தவறானது.
மற்றும் சுமார் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு மேலாக அதிக காய்ச்சல் இருந்தால் அவர் உடனடியாக முழு ரத்த பரிசோதனைகளையும்,
NS1 ஆன்டிஜென் இரத்த பரிசோதனையையும் செய்து குறிப்பிட்ட நோயினை கண்டறிய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தற்போது மக்களுக்கு விசேட எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.