உள்வாங்கிய கடல்!! அச்சத்தில் பிரதேச வாசிகள்…
உலகில் நடை பெறுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக சீரற்ற கால நிலையானது இலங்கை மற்றும் அண்டை நாடான இந்தியா ஆகியவற்றில் இருந்து வருகின்றது. இந் நிலையில் திடீரென பாம்பன் பகுதியில் திடீரென கடலானது உள்வாங்கிய நிலையில் கடலோரம் மீனவர்களுக்கும் மற்றும் பிரதேச வாசிகளுக்கும் அச்ச நிலமையை ஏற்படுத்தி இருக்கின்றது.
மற்றும் இந்தியாவின் ஏனைய இடங்களில் சீரற்ற காலநிலையின் காரணமாக கன மழை பெய்து வருவதுடன் குறித்த பகுதியில் கடல் ஆனது அமைதி காப்பதாகவும் மற்றும் இவ்வாறு கடல் சுமார் 300 மீட்டர் அளவில் உள்வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலைகளின் பின்னராக கடலில் இவ்வாறான பல மாற்றங்கள் ஏற்படுவதாகவும்,
இவை ஏன் ஏற்படுகின்றன என்பதுக்குரிய தெளிவு இது வரை கண்டறியப்படவில்லை எனவும் அப் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் முறைப்பாடுகளையும் கூறி வருகின்றனர்.
மற்றும் சீரற்ற கால நிலையின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் யாவரும் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்ற இந் நிலையில்,
சுமார் 300 மீட்டர் அளவில் தொலைவில் கடல் ஆனது உள்வாங்கிய நிலையில் அங்கிருந்த விசைப்படகுகள் அனைத்தும் கரை தட்டிய நிலையில் காணப்பட்டது.
குறித்த பிரதேச வாழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மற்றும் இது சுனாமி பேரலைகளுக்கான முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க கூடும் எனவும் இது குறித்து பலர் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு எந்நேரத்திலும் ஆயத்தமாக இருப்பது குறித்து தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.