சந்திராயன்-3 பின்னணியில் உள்ள தமிழன்!!
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த முதன் முதலில் நிலவின் தென் துருவத்தை அடைந்த பொறுமையை சேர்த்த சந்திராயன் 3 பின்புறத்தில் தமிழர் ஒருவர் இருந்து உள்ளார்.
இவரின் பெயர் வீர முத்துவேல் .தற்போது ப்ராஜெக்ட் டைரக்டராகவும் கடமை ஆற்றி வருகிறார்.
குறித்த தமிழன் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது பத்தாம் வகுப்பு வரை சாதாரண மாணவன் ஆக இருந்து வந்தவர்.
இவர் தான் இவ்வளவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சந்திராயன்3 இன் முக்கிய புள்ளி ஆக இருந்து வந்தவர்.
பின்பு டிசைனிங் இன்ஜினியர் ஆக ஜாயின் பண்ணிய இவர் இதனைத் தொடர்ந்து அவரது கனவான ரிசர்ச் ஆபரேஷன் சென்டரில் வேலை பார்ப்பதற்கு உரிய வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் ப்ரஜெக்ட் இன்ஜினியராகவும் அதனைத் தொடர்ந்து ப்ராஜெக்ட் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார் இவர்.
பின்னர் இஸ்ரோவின் மிகப்பெரிய குழுவிற்கு தலைமை பொறுப்பினை தாங்கி நிற்கும் பொறுப்பினை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அசோசியேட் ப்ராஜெக்ட் டைரக்டராக சந்திராயன் 2 ப்ரொஜெக்ட்டில் இடம் பெற்று உள்ளார் வீர முத்துவேல் அவர்கள்.
சந்திராயன்2 மிஷனில் வெற்றிகரமாக செயலாற்ரியும் மேலும் சந்திராயன்2 மிஷனில் தனது வெற்றி இலக்கை யும் அடைந்து உள்ளார் வீர முத்துவேல் அவர்கள்.
இதனை அடுத்து சந்திராயன்3 மிஷனில் ப்ராஜெக்ட் டைரக்டராகவும் பணியாற்றி உள்ளார்.
இஸ்ரோவில் இவர் சந்திராயன் மூன்று குறித்து ஒரு மிகப்பெரிய குழுவினை தலைமைத்துவ ப்படுத்தி இருக்கிறார் எனவும் தெரிய வருகின்றது.
மேலும் அவர் கூறுகையில் தான் ஒரு எளிமையான மனிதன் எனவும் தன்னால் இந்த அளவுக்கு இவ்வளவு உயரத்தை அடைய முடியும் எனில் எல்லோராலும் அடைய முடியும் எனவும். மேலும் வாய்ப்புகள் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதாகவும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும்,
நமக்கு இருக்கும் 100% பங்கேற்கும் திறன், எதிர்பார்க்கும் தன்மை அற்றத்துடன் மற்றும் கடினமாக உழைக்கும் திறன் காரணமாக,
உண்மையாகவே வெற்றியின் இலக்கை இலகுவாக அடைய முடியும் எனவும் குறித்த தமிழரான வீரமுத்துவேல் தெரிவித்து உள்ளார்.
மேலும் தமிழனாக இருந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திராயன் 3 இன் முக்கிய தலைமைத்துவத்தை கொண்டு நடத்திய வீர முத்துவேல் அவர்கள் தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு என பெருமை சேர்த்து வைத்து உள்ள ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.