ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை இடம் பெற்ற இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! அதிர்ச்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள்!!
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2500 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு 10000 இற்கும் அதிகமான பொதுமக்கள் காயம் அடைந்திருந்தனர் .
இதனை அடுத்து இன்று அதிகாலை புதன் கிழமை அன்று சரியாக 6. 11 மணி அளவில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் எனும் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் சுமார் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. மேலும் இவ் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2400 க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இடம் பெறுகின்ற தொடர் நிலநடுக்கங்களின் காரணமாக பலர் தங்களது இயல்பு வாழ்க்கையின் இழந்து வருவதுடன் இதன் காரணமாக பலர் தங்களின் அன்பிற்குரியவர்கள் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் உடனடியாக ஆப்கானிஸ்தானின் மீட்பு படையினர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் நிலநடுக்கத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்றும் பணிகளில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இந் நிலநடுக்கம் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மற்றும் பாதுகாப்பான இடத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஆப்கானிஸ்தான் தற்போது பொது மக்களுக்கு அறிவித்தல் இனையும் விடுத்துள்ளது.
மேலும் இன்றைய நிலநடுக்கத்தில் சிக்குண்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் மீட்பு பணி இன் முழுமையான தகவல் இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 20 கிராமங்களில் சுமார் 2000 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் மற்றும் இந்த நிலநடுக்கமானது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகவும் பதிவாகியுள்ளது.
மற்றும் ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் தற்போது பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.