ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நடத்திய உக்கிர தாக்குதல்!! இஸ்ரேலிற்க்கு கரம் கொடுக்கும் அமெரிக்கா….அதிரடியாக போர்க்களத்தில் மாறி மாறி தாக்குதல்…
பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடுத்து ஹமாஸ் அமைப்பினர்கள் காசாவிலிருந்து ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
அடுத்தடுத்து 30 வினாடிக்குள் உடனடியாக இரண்டு சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் படையினர்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக இஸ்ரேலின் ராணுவமானது காசா பகுதி எல்லைகளில் தங்களது ராணுவ வீரர்களை நிறுத்தி சுற்றி வளைத்து அதிரடியாக போர்க்களத்தில் இறங்கியுள்ளது.
இதனை அடுத்து மாறி மாறி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதின் காரணமாக பொது மக்கள் பலரும் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து நான்கு நாட்களாக இரு பகுதிகளிலும் தாக்குதல் இடம் பெறுவதால் பொது மக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
இந் நிலையில் இன்றைய தினம் வரை இப் போரின் காரணமாக இஸ்ரேலில் சுமார் 1008 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,418 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே வேளை காசாவில் 900 பேர் உயிரிழந்த நிலையில் 4250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதனை அடுத்து இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்டு 1500 ஹமாஸ் படையினரை இஸ்ரேல் ராணுவம் சூட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஹமாஸ் படையினர் – இஸ்ரேல் போரிற்கான பின்னணி….
பாலஸ்தீன் மக்களின் உரிமைக்காகவே இப் போர் நடைபெறுவதாக மேலும் ஆரம்பத்தில் இஸ்ரேல் ஆட்கொண்டிருந்த பகுதி முழுவதுமாக பாலஸ்தீன் மக்களே இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இந் நிலையில் இஸ்ரேல் ஆனது பெரும்பாலான பகுதிகளை தன் வசப்படுத்தி இரண்டு பகுதிகளை மாத்திரம் காசா மற்றும் வெஸ்டர்ன் பேங்க் ஆகிய இரு பகுதிகளை பாலஸ்தீன மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதனை அடுத்து ஹமாஸ் என்னும் படை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலாவது தாக்குதலினை ஹமாஸ் படையினரே ஆரம்பித்துள்ளனர்.இதனை அடுத்து அமெரிக்கா ஆனது தற்போது இஸ்ரோலிற்கு உதவுவதாக பகிரங்கமாக அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தற்போது இஸ்ரேலிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மிகவும் பலம் வாய்ந்த அமெரிக்காவின் ராணுவ வீரர்களையும் தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் படையினர் இற்கு எதிராக பதில் தாக்குதலை ஆரம்பிப்பதாக இஸ்ரேல் செய்தி இனை வெளியிட்ட பின்பு தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந் நிலையில் காசா பகுதியில் மின்சாரம், நெட்வொர்க் என அணைத்து முக்கிய விடயங்களையும் முடக்கியுள்ளது இஸ்ரேல் .