பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் பலி ….
பாகிஸ்தான் இல் உள்ள மாகாணத்தின் பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் போது சுமார் 60 நபர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தற்போது செய்தியினை வெளியிட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு 29.09.2023 அன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றிற்கு அருகாமையில் இக் குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும் இதன் போது நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்துள்ளதாகவும், மேலும் காயமடைந்தவர்கள் சிலர் மிகவும் மோசமான நிலைமைகளில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது .
மேலும் இது குறித்த உயிரிழப்பு எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள மதினா மசூதியின் அருகே அரங்கேறிய இக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது குறித்த மாவட்ட பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவரும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மீலாத் நபியின் பிறந்த நாளை முன்னிட்டு குறிப்பிட்ட மசூதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிறப்பு தொழுகைக்காக அங்கு ஏராளமான மக்கள் திரண்டு இருந்த நிலையில்,
இக் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேரி உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச் சம்பவத்தினை தற்கொலை படை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இச் சம்பவத்தை புரிந்த தற்கொலை குண்டுதாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.