இந்தியாவில் கன மழை காரணமாக நிலச்சரிவு!! 9 பேர் பலி
இந்தியாவில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத் தில் உள்ள ஜடோன் கிராமத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவு இன்று திங்கட்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணி யளவில் நடைப் பெற்றது . கனமழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளத்தால் அப் பிரதேசத்தில் ஒரு கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் வரை சிக்கி உள்ளனர்.
சிம்லாவில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியான கோயிலே இடிந்து விழுந்ததாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் .
மேலும் முதல்வர் உடனடியாக கோயில் தளத்தைப் பார்வையிட்டார். மேலும் கொடுத்தால் விவரங்களை செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்தார்.
மேலும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன,
மீட்பு பணிகள் விடா முயற்சி உடன் செயல்பட்டு வருகிறது.”
ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் சுமார் 20 முதல் 25 பேர் சிக்கி உள்ளனர் என மீட்பு பணிகள் தெரிவித்தது .
இக் கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அளிக்குமாறு உத்தரவிட பட்டுள்ளது என்று முதல்வர் மேலும் கூறினார்.
ஆறுகள் மற்றும் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் , மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டும் இருக்கின்றது .
அம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,
பொதுமக்கள் வெளி இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் இம் மாநிலம் பற்றி அறியும் போது:
இது பருவமழை காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த ஜூலை மாதம் ஏற்ப்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில விஞ்ஞானிகள் இச் அனர்த்தம் தொடர்பாக கூறும் போது , இது மனிதனால் ஏற்படும் காலநிலை நெருக்கடியால் இந்தியாவில் பருவமழை காலத்தை மிகவும் குழப்பமானதாகவும் கூறுகிறார்கள்.