ருமேனியா எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பலி 56 பேருக்கு காயம்!!!
ருமேனியா இன் தலைநகர் பகுதியில் உரிமம் பெறாத திரவ எல் பி எரிவாயு நிரப்பு நிலையத்திலே இத் தீச்சம்பவம் நடந்தேறி உள்ளது.
இதன் போது சுமார் இரண்டு வெடிப்புக்களில் தீ ஆனது பரவி உள்ளது. இத் தீ விபத்தானது நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தேறி உள்ளது.
மேலும் நேற்று வெளியிடப்பட்ட செய்திகளில் ஒரு நபர் இறந்துள்ளனர் என அறிவித்திருந்தனர்.
இருப்பினும் இன்றைய செய்திகளில் இருவர் இறந்துள்ளனர் என அவ் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்து உள்ளது.
மேலும் இதன் போது சுமார் 56 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். இதில் அதிகமானோர் பாதுகாப்பு படையினர் ஆன தீயணைப்பு படையினை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
முதலாவது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கே மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் அத் தீனை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது ;
உடனடியாக இரண்டாம் வெடிப்பு ஏற்பட்ட நிலையினால் அதிகமான தீயணைப்பு வீரர்களுக்கு இதன் போது காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உரிமம் இல்லாத எல்பிஜி நிரப்பு நிலையத்திலே ஒரு டேங்கரிலிருந்து மாற்றும் ஒரு டேங்கருக்கு எரிவாயு இனை மாற்றும் போதே இவ் வெடிப்பு சம்பத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் உட்பகுதியில் தீ இற்கான ஆதாரம் ஒன்று கிடைக்கப் பெற்று இருந்தது.
அவ் ஆதாரத்தில் கவனக் குறைவாக பாவிக்கப்பட்ட சிகரெட் ஒன்றினை வீசியதன் இப் பாரிய விபத்தானது நிகழ்ந்தேறி உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் உயிரிழந்த இருவரும் கணவன் ,மனைவி எனவும் வெளியாகி உள்ளது.
கணவர் அவர் மாரடைப்பினால் இறந்துள்ளார் எனவும் கா தீக்காயங்களுக்கு உள்ளாகி அவரது மனைவியும் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதன் போது காயமடைந்தவர்கள் உடனடியாக ஒரே இரவில் வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக ருமேனியா அரசாங்கம் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் மற்றும் இரண்டு பொது மக்களையும் உள்ளடக்கியாக இருக்கின்றது.
மேலும் இதனை அடுத்து நான்கு பேர் இத்தாலிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அவர்கள் அழைத்துச் செல்ல இருப்பதாக தெரிய வருகின்றது.
நோயாளிகளில் தீக்காயங்களுக்கு உட்பட்ட 18 நோயாளிகளை சிகிச்சைக்காக ஐரோப்பாவிற்கு அனுப்புவதற்கும் தற்போது ருமேனியா ஆயத்தமாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தினை தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நோர்வே ஆகிய நாடுகள் ருமேனியாவிற்கு உதவி வழங்கின எனவும் தெரிய வருகின்றது.
ருமேனியா தீ பரவல் பின்னணி…
எரிவாயு வைத்திருந்த நிறுவனமானது சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தனது உரிமத்தினை இழந்ததாகவும்.
அங்கு இது தொடர்பான பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதனாலே அது மூடப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதனை அடுத்து உரிமையாளர் அவர் எரிவாயு நிலையம் முற்றத்தினை டாங்கர்களுக்கான வாகன நிறுத்தமிடமாக அறிவித்து இருந்தார்.
ஆனால் ஊழியர்கள் ஒரு தொட்டியில் இருந்து மற்றொரு தொட்டிக்கு ஒரு தொட்டியில் எரிவாயு இணை மாற்றுவதற்கு பயன் படுத்தி இருக்கின்றனர் .
ஆனால் உண்மையில் இது ஒரு சட்ட விரோதமான செயல் ஏன் என்றால் அது ஒரு உரிமம் பெறாத நிறுவனம் என்ற படியினால் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு அங்கு இடம் இல்லை.
இதனால் தலைநகர் பகுதி சூழ சுமார் 700 மீட்டர் சுற்றளவில் உள்ள அளவில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் பெரும் அசோகரியத்தையும் சந்தித்துள்ளனர்.