World

ஐரோப்பாவில் லஞ்சம் கோரி கிடைக்காத பட்சத்தில் பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்தி இலங்கை பிரஜை!!

ஐரோப்பாவில் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையினை சேர்ந்த பிரஜை ஒருவர் தற்போது இத்தாலியில் லஞ்சம் கேட்டு கொடுக்காத இடத்தில் பெண் ஒருவரை கடத்தி சென்றுள்ள விவகாரமானது பெரிய சர்ச்சைக்குரிய ஒன்றாக தற்போது பார்க்கப்பட்டு வருகின்றது .

இந்த நிலையில் இத்தாலியில் நேபிள்ஸ் எனும் பகுதியில் தங்களது காரினை நிறுத்தியுள்ளனர்.

குறித்த இடத்தில் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கை பிரஜையானவர் சம்பந்தமே இன்றி தம்பதியிடம் சுமார் 60 யூரோக்களை கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கொடுக்க மறுத்த தம்பதியினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து காரில் இருந்த பெண்ணை உடனடியாக இறங்கச் செய்து அவரை தன்னுடன் அழைத்துச் சென்று அச்சுறுத்தி இருக்கின்றார்.

குறித்த பெண்ணின் காதலன் உடனடியாக இத்தாலி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து குறித்த விடயம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக பெண்ணின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த இலங்கை பிரஜை இருந்த இடத்தினை கண்டுபிடித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த இலங்கையர் 40 வயது நிரம்பியவர் எனவும் தெரியவந்துள்ளது .

மேலும் இவருக்கு எதிராக கடத்தல் மற்றும் லஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடைப் பெற்ற குறித்த சம்பவமானது தற்போது புலம் பெயர் தமிழர்களின் இடையே அதீத விமர்சனங்களை பெற்று வருகின்றது .

Related Articles

Back to top button