பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 12 வயது சிறுமி… இந்தியாவை உலுக்கிய கோரச்சம்பவம்!!
இந்தியாவின் மாநிலமான மத்திய பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வீதியோரத்தில் வீசி எறிந்து உள்ள சம்பவமானது தற்போது இந்திய நாட்டை உலுக்கிய சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
மத்திய பிரதேசத்தின் பட்நகர் பகுதியில் சுமார் 12 வயதான சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வீதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி இதன் காரணமாக மயக்க நிலையிலே இருந்துள்ளார் .
இதனை அடுத்து மயக்கம் தெளிந்த குறித்த சிறுமையானவர் அருகில் இருந்த வீடுகளில் அரை நிர்வாணத்துடன் உதவி கோரியுள்ளார்.
குறித்த சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சனங்களை பெற்று அதிகமான சர்ச்சைக்கு உள்ளான செய்தியாக பார்க்கப்படுகின்றது.
இதனை அடுத்து குறித்த சிறுமையானவர் ஆசிரமம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அச் சிறுமியின் நிலை கண்டு ஆசிரமத்தில் இருந்த மதகுரு ஒருவர் சிறுமியின் நிலை கண்டு உடனடியாக அவரின் உடலை மறைத்து அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் குறித்த சிறுமையை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர் .
மேலும் குறித்த சிறுமி சக்கரை நோயாலும் பாதிக்கப் பட்டிருந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு உள்ளனர் .
வைத்யசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த 12 வயது சிறுமியின் உடல் நலம் தற்போது தேறி வருவதாக வைத்தியசாலையின் மருத்துவர்கள் தற்போது தெரிவித்து இருக்கின்றனர் .
இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இது தொடர்பாக குறித்த குற்றவாளிகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .