World

கனடா பிரஜைகளை இந்தியாவின் காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்கக் கோரி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது கனடா நாட்டின் அரசு!!

காஷ்மீரின் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள இந் நிலையில் கனடா அரசானது பாதுகாப்பு முன்னறிவிப்பினை கனேடிய மக்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் ஜம்மு காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையினால் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மற்றும் பயங்கரவாதம், கடத்தல் போன்ற செயற்பாடுகள் அரங்கேறி வருவதாகவும் இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கனடா அரசானது தனது நாட்டின் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வசித்து வந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

இக் கொலை சம்பவத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கனடாநாட்டு பிரதமர் குற்றம் சாடி இருந்தார்.

இதனை அடுத்து இதனை ஏற்கமறுத்தது இந்தியா.

மேலும் இந்திய அரசாங்கமானது இந்த குற்றச்சாட்டு ஆனது ஆபத்தானதாக இருப்பதாகவும் மேலும் பல்வேறுபட்ட உள்நோக்க சதி விளையாட்டுகளை கொண்டதாகவும் இருக்கின்றது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button