World

மருத்துவ ஊழியர்களின் தவறினால் உயிரிழந்த பெண்!!

இங்கிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, லங்காஷயரில் உள்ள ஒரு கடலோர ரிசார்ட் ஆன பிளாக்பூல் இல் வளர்ந்து வரும் மூளைக் கட்டிக்கு மருத்துவ ர்கள் விரைவில் அறுவை சிகிச்சை செய்யத் தவறியதால்,

பெண் ஒருவரின் உயிர் தேவை இ ல்லாமல் பறிப்போய் உள்ளது என்று இங்க்லாந்து நாட்டு சுகாதார புகார்கள் சேவை இன்று தெரிவித்து உள்ளது.

பிளாக்பூலைச் சேர்ந்த மே ஆஷ்ஃபோர்ட் என்பவரே இந்த நிகழ்வினால் உயிர் யிழந்து உள்ளார் .


தலைவலி மற்றும் வலிப்புத்தாக்கங்களை என்ற உடல் வாதைகளை அனுபவித்த மே ஆஷ்ஃபோர்ட் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்ய ப்பட்டு ,

பிறகு 2010 இல் மூளைக் கட்டியால் பாதிக்கப் பட்டு உள்ளார் என்பது கண்டறியப்பட்டது .

பிரபல ராயல் ப்ரெஸ்டன் மருத்துவமனையில் வழக்கமான எம் ஆர் ஐ ஸ்கேன்கள் செய்த போது , அக் கட்டி வளர்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருந்தும் , ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை ,

ஆனால் தற்போது அவ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டே இறந்துள்ளார் என்பது தான் பெரிய மன வேதனை அளிக்கிற ஒரு சம்பவமாக உள்ளது .

மருத்துவ ஊழியர்கள் ஸ்கேன் முடிவுகளை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால், அவருக்கு உரிய சிகிச்சை மிகவும் தாமதம் ஆனது,

என்று பாராளுமன்ற மற்றும் சுகாதார சேவை குறைதீர்ப்பாளரின் (PHSO) குறித்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

உண்மையில் கட்டி வளர்ந்து அவரின் மூளையைச் சுற்றி உள்ள பகுதியை பாதிக்கும் முன்னரே , திருமதி ஆஷ்ஃபோர்ட் அவருக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்ப்பட்ட பக்கவாதத்தால் 71 வயதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்துஉள்ளார் .

குறைதீர்ப்பாளரிடம் மருத்துவ புகாரைக் கொண்டு வந்த மேயின் கணவர் ஆலன்,

“எனது மனைவி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டியின் விளைவுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் ,

மேலும் மருத்துவர்களினால் அவரது கட்டியின் கண்காணிப்பு மிகவும் சந்தேகத்திற்கு உரியதாக இருந்ததை ஸ்கேன் அறிக்கைகளைப் படிக்கும்போது குடும்பத்தினருக்கும் தனக்கும் தெளிவாகத் தெரிந்தது,” என்று அவர் கூறினார்.

“மூளையின் முழுப் பகுதியிலும் பரவுவதற்கு முன்பே கட்டி அகற்றப்பட்டிருக்க வேண்டும். அனால் மருத்துவர்கள் ஏன் 5 வருடம் ஆகியும் அதனை அகற்றவில்லை என்பது தான் எங்களுக்கு முழு மர்மமாக உள்ளது.”

மருத்துவ

NHS இல் இமேஜிங் நடைமுறைகளை அவசரமாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த வழக்கு மீண்டும் வலியுறுத்துகிறது என்று Ombudsman Rob Behrens கூறினார்.

“ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே தொடர்பான தவறுகளால் தனது உயிரை இழந்த ஒரே நபர் திருமதி ஆஷ்போர்டு மட்டும் அல்ல என்பதை எங்கள் கேஸ்வொர்க் காட்டுகிறது” என்றும் அவர் கூறினார்.

“ஸ்கேன்களின் சரியான நேரத்தில் பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல் பல சுகாதார நிலைகளைக் கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கு அடிப்படையாகும்.

இது குறித்து விரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டால் மேலும் இவ்வாரான பாதிப்புகளால் நபர்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கலாம் என்றும் கூறினார் .”

லங்காஷயர் போதனா மருத்துவமனைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது :


“திருமதி ஆஷ்ஃபோர்டின் பராமரிப்பு தொடர்பான பாராளுமன்ற மற்றும் சுகாதார சேவை குறைதீர்க்கும் குழு அறிக்கையின் கண்டுபிடிப்புகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றும் ,

மேலும் திரு ஆஷ்போர்டிடம் இது குறித்து மன்னிப்பை உம் கோருகிறோம். என்று கூறினார் .

PHSO மற்றும் NHS இங்கிலாந்து மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் ரேடியாலஜிஸ்டுகள் ஆகியவை ஸ்கேன் மற்றும் எக்ஸ்-கதிர்கள் மேற்கொள்ளப்படும்,

மற்றும் அறிக்கையிடப்படும் விதத்தில் மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு இங்லாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button