புலம்பெயர்ந்தவர்களினால் கனடாவில் பரபரப்பு!!!
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களினால் தெருக்களில் ஒன்று திரண்ட பேரணி ஒன்று நடை பெற்றுள்ளது.
குறித்த பேரணியில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அந்நாட்டில் வாழ்வதற்கு தகுந்த ஆவணங்கள் அற்றவர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் அகதிகள் என பலரும் கலந்துகொண்டு பேரணி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் ஒன்று கூட இருக்கும் இந் நிலையிலே இவ்வாறு இவர்களின் நடத்தப்பட்ட பேரணியானது முக்கியமாக அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பினை அனுமதிக்க கோரியே நடைபெற்றிருக்கின்றது .
மேலும் தற்போது வெளியாகின்ற செய்திகளின் அடிப்படையில் கனடா நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் பலர் வசிப்பிடங்கள் இன்றி தெருக்களில் வாழ்ந்து வரும் செய்தி வேதனையை அளித்திருந்தது.
இதனை அடுத்தே இவர்கள் இவ்வாறான பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் இந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழுகின்ற வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை “சமகாலத்தில் அடிமைத்தனத்தின் இனப்பெருக்கம் செய்யும் இடம்” என பெயர் சூட்டி இருந்தது. இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் கூறியிருந்தார்.
இது பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மற்றும் அனேக எதிர்ப்புக்களை கொண்டதாகவும் அமைந்திருந்தது.
இவ்வாறு அத்தியாவசிய தேவையான வதிவிடங்களுக்காக உரிமை கோரி இந்த பேரணியானது புலம்பெயர்ந்தவர்களினால் நடைபெற்று உள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும் இது தொடர்பான விடயங்களை உற்று நோக்கும்படி கோரி வலியுறுத்தி இருக்கின்றனர் .