கோவிட் வைரஸின் புதிய திரிபு… வெளியான அதிர்ச்சி தகவல்!!
தற்போது இந்தியாவின் கேரளாவில் கோவிட் வைரஸின் புதிய திரிபானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
இந் நிலையில் புதிய வைரஸின் பரவல் அதிகமாக ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தங்களது செய்திகளில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
மற்றும் வைரஸின் புதிய திரிபான ஜே என் 1 வைரஸ் ஆனது மேல் சுவாசக் குழாயினை பாதிக்க கூடிய சக்தி வாய்ந்த வைரஸ் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
இந் நிலையில் குறித்த கோவிட் வைரஸின் அறிகுறியாக காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சு திணறல், மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் தென்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் குறித்த வைரஸின் திரிபானது வேகமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும் எனவே ஆரம்பத்திலேயே பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் தற்போது பொது மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்திருக்கின்றனர் .
இப் புதிய திரிப்பானது ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கோவிட் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாகவும் உலக நாடுகள் தற்போது தெரிவித்து இருக்கின்றன.