பள்ளத்தாக்கில் குழந்தைகளுடன் சிக்குண்டுள்ள கேபிள் கார்!! பாகிஸ்தானில்
பாகிஸ்தானில் இன்று காலை ஏழு மணி அளவில் கேபிள் கார் ஒன்று அறுந்து தொங்கிய நிலையில் பள்ளத்தாக்கின் இடையில் குழந்தைகளுடன் சிக்குண்ட செய்தி தற்போது இன்று வைரலாகி வருகின்றது.
அந் நிலையில் குறிப்பிட்ட பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரதேசத்தில் இவ்வாறு கேபிள் காரில் குழந்தைகளுடன் பெரியவர்களும் சிக்குண்டு இருக்கின்றனர் .
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலை பிரதேசம் எனவும் மேலும் பள்ளத்தாக்கு 900ft உயரத்தை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
அப் பிரதேசத்திலிருந்து உள்ளூர் பள்ளிக்கு செல்வதற்கு சுமார் 1.4 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலையில்,
இக் கேபிள் காரின் மூலம் குறைவான 275 மீட்டர் குறைவான அளவு தூரத்துனை கடப்பதற்கு எடுப்பதாகவும் மேலும் ஊரினை சுற்றி வருவதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும் நிலையில் ,
கேபிள் காரின் மூலம் வெறும் நான்கே நிமிடத்தில் உள்ளூர் பள்ளியினை அடைந்திட முடியும் .
இதனால் இவர்கள்கேபிள் காரினை பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு சிக்குண்ட கேபிள் கார் இன்று காலை நான்கு பயணங்களை முடித்த தனது ஐந்தாவது பயணத்தினை ஆரம்பித்தபோது பயணத்தின் இடையிலே கோளாறு காரணமாக நின்று விட்டதாகவும்.
இதன் போது கேபிள் கேபிள் காரானது பள்ளத்தாக்கில் விழும் அபாயத்தில் உள்ளதாகவும் தகவல் சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வந்தது.
இந் நிலையில் உடனடியாக ஆர்மியின் ஹெலிகாப்டர் உண்டு சிறுவர்களை மீட்பதற்காக அவ் விடத்திற்கு விரைந்தது .
இருப்பினும் சீரற்ற காற்றினால் ஹெலிகாப்டர் அருகாமையில் செல்லும்போது கேபிள் காரிற்கு ஆபத்து நிகழ வாய்ப்பு உள்ளதை எண்ணி,
ஆர்மி இன் மீட்பு பணி ஆனது சற்று நிதானமாகவே தங்களது மீட்பு பணியினை செய்து வருகின்றது.
காலை ஏழு மணி அளவில் சிக்குண்ட நிலையில் தற்போது பாகிஸ்தானில் 10 மணி ஆகின்ற நிலையில் ,
கேபிள் காரில் காணப்பட்ட குழந்தைகளில் ஐவர் மீற்க்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது .
இவர்கள் பல மணி நேரம் தொங்கி தொங்கிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஒரே ஒரு கேபிளில் தொங்கிய நிலையில் கேபிள் கார் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .
இருப்பினும் தற்போது பாகிஸ்தானில் இரவு 10 மணி ஆகின்ற நிலைமையில் ஹெலிகாப்டர் ஆனது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
குழந்தைகளுடன் சிக்குண்டுள்ள கேபிள் கார்…
மேலும் கேபிள் கார் ஆனது குறித்த பிரதேசத்தில் உள்ள மெக்கானிக் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட தாக மக்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் குறிப்பிட்ட பள்ளத்தாக்கின் மேல் சிக்கியுள்ள கேபிள் கார் இல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும்,
இதில் ஒரு சிறுவனுக்கு இதய நோய் இருந்ததாகவும் அவர் பல மணி நேரம் சுயநினைவின்றி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெப்பம் காரணமாக ஒரு குழந்தை மயங்கியும் விழுந்துள்ளது. இருப்பினும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் மீட்கப்பட்டாரா அல்லதுஅவரும் இந்நிலை வரை கேபிள் காரில் சிக்குண்டு உள்ளாரா என்னும் தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
மேலும் உள்ளூர் ஆசிரியர் ஒருவர் கூறுகையில் அப் பகுதியில் தினசரி போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலமையினால் நாள் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேபிள் கார் வழியாகவே பள்ளிக்கு ஆபத்தான மற்றும் பாதுகாப்பாற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் ஆராய்கையில் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு கூறியிருந்தனர்.
இருப்பினும் முதல் மீட்பு ஹெலிகாப்ட்டர் ஆனது வருவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகிவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது .
மேலும் அப்பகுதியணை சூழ அப்பகுதி அப்பிரதேச வாசிகள் சூழ்ந்துள்ள போட்டோக்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றது.
இருப்பினும் மீட்பு பணிகள் சிக்குண்டவர்களுக்கு உணவு பொதிகள் மற்றும் தண்ணீர் வகைகளை கொடுத்து வந்ததாகவும் இருப்பினும் பிரதேசத்தின் வானிலை அறிக்கையின் படி புதன்கிழமை அதாவது நாளை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் எப்படியாவது நிலைமை மோசமாகவதற்கு முன் மீதமுள்ளவர்களை மீட்பு பணி காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளத