நூறிற்கும் அதிகமான டால்பின்கள் இறப்பு அதிர்ச்சியில் உலக மக்கள்…
அமேசான் காடுகளில் நூறிற்கும் அதிகமான டொல்ஃபின்கள் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்தியை வெளியிட்டுள்ளது.
பாரம்பரியமாக உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் மிகப் பெரிய காட்டு பகுதியான அமேசன் காட்டிலே அனேக மிருகங்களும், நீர் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
சமீப காலத்தில் இப் பெரிய அமேசான் காட்டிலே தற்போது வெப்ப நிலையானது அதிகரித்து படிப்படியாக உயர்ந்து கொண்டு வருவதாக உலக காலநிலை ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.
இந் நிலையில் அதிகரித்த வெப்பநிலையின் காரணமாக பிரேசிலில் பரவியுள்ள அமேசன் சமவெளியில் சுமார் 20 தொடக்கம் 25 டிகிரி வரை காணப்பட்ட வெப்பநிலையானது 100 முதல் 102 பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது ஆக தெரிவித்துள்ளனர் .
இவ் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக அமேசன் நதியில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற டொல் ஃப்பின்களின் இறப்பு வீதமானது படிப்படியாக அதிகரித்து வருவதாக குறித்த ஊடகங்கள் சர்வதேசத்திற்கு தகவலினை வெளியிட்டு உள்ளது.
மேலும் இதனை அடுத்து அமேசான் ஏரிகளில் கரையொதுங்குகின்ற டொல்ஃபின்களின் இறந்த உடல்கள் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்க உள்ளதாக பிரேசில் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அமேசான் நதியில் வாழ்கின்ற எஞ்சிய டொல்பின்களினை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க உள்ளதாக குறித்த அரசு தெரிவித்துள்ளது.
குறித்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக அமேசான் காடுகளில் நீர்நிலைகள் வாழ்கின்ற மற்றும் தரைப் பகுதியில் வாழ்கின்ற பல உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மிகவும் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நூறிற்கும் அதிகமான டால்பின்களின் இறப்பான தற்போது சர்வதேச ரீதியில் பல்வேறு விதமான கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்,
மற்றும் பல்வேறு துறையினரும் இறப்பு வீதத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கையை எடுப்பதற்கு முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .