Srilanka NewsWorld

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்து தமிழ் இளைஞன்!!

தற்போது சுவிஸ் நாட்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழத்து தமிழ் இளைஞன் ஆன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஈழத்து இளைஞனானவர் அந்நாட்டு பசுமை கட்சி சார்பாகவே போட்டியிட உள்ளார்.

மற்றும் சுவிஸ்லாந்தின் ஆர்காவ் எனும் மாநிலம் சார்பாகவே இளைஞர் போற்றி இட இருக்கின்றார் .

மேலும் இவர் இலங்கையின் வட மாகாணமான யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வல்வெட்டி துறையினை பூர்வீகமாக கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இவரது பெயர் செல்வதயாளன் ரிசோத் ஆகும். உலகளாவிய ரீதியில் ஈழத்து தமிழர்கள் பல்வேறுபட்ட துறைகளில் வெற்றியடைந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பல்வேறு நாடுகளில் உள்ள ஈழத்தினை பூர்விகமாக கொண்டுள்ள தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்ற செய்தி அவ்வப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பரவிக் கொண்டு இருக்கின்றன .

அவ் வகையில் எதிர் வரும் அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அளவில் சுவிஸிலண்ட் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற இச்சமயத்தில் இலங்கை ஈழத்துத் தமிழரான ரிசோத் செல்வதயாளன் போட்டியிட இருக்கின்றார்.

மேலும் குறித்த மாநிலத்தினை சேர்ந்த தமிழர்கள் பலரும் இவரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும்.

இதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் சார்பான விடயங்களை அந் நாட்டின் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர்கள் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர் .

மேலும் சுவிஸ் நாட்டில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு அமைந்துள்ள பல்வேறு மாநிலங்கள் சார்பாக பிரதான கட்சிகளில் ஈழத்தமிழர்கள் போட்டியிடுவது வழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தல்….

சுவிஸலண்ட் நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கவுன்சிலின் 200 உறுப்பினர்களை 26 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம் .

அவ்வகையில் 26 மாநிலங்களில் ஒன்றான ஆர்காவ் மாநிலத்திலே ரிசோத் செல்வதயாளனை போட்டியிட்டுள்ளார் .

மேலும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் திறந்த பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவம் வாயிலாகவே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் .

கூட்டணிக் கட்சிகளுக்கான வெளிப்பாடுகள் மற்றும் கட்சிகளுக்குள் உள்ள பட்டியல்களுக்கான துணை-வெளிப்பாடுகள், அங்கு வெளிப்படையான பட்டியல்கள் தொடக்கத்தில் இட ஒதுக்கீடுக்காக ணக்கிடப்படும்.

தேசிய கவுன்சிலில் உள்ள இடங்கள் அந்தந்த மக்கள்தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கு பிரிக்கப்படுகின்றன .

இந்நிலையில் தமிழ் இளைஞன் போட்டியிடும் ஆக்ராவ் மாநிலத்தில் சுமார் 16 சீட்கள் உள்ளன.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலே இது பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறையின் காரணமாக இலங்கையிலிருந்து தமிழர்கள் பலரும் புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

உலக நாடுகளில் வெவ்வேறு இடங்களில் இருந்தும் ஈழத்து தமிழர்கள் வெவ்வேறு துறைகளில் தங்களது வெற்றியினை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

அவ் வகையில் அரசியல் துறையில் பல்வேறுபட்ட நாடுகளில் ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகின்ற செய்தி அவ்வவ்போது ஊடகங்களில் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஈழத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

Related Articles

Back to top button