பாகிஸ்தானில் பாரிய ரயில் விபத்து சில மணிநேரதிற்கு முன் !!
பாகிஸ்தானில் ரயில் விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்து உள்ளனர். இவ் விபத்து இன்று பதிவாகி உள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து சுமார் 275 கிமீ (171 மைல்) தொலைவில் உள்ள நவாப்ஷாவில் உள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் கவிழ்ந்தன.
இதன் போது ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியதில் சுமார் 30 பேர் இறந்து உள்ளனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பாகிஸ்தானில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும் ஒரு பெரிய ரயில் ஆனது இன்று தண்டவாளத்தை விட்டு வெளியேறியது,
மற்றும் அதன் எட்டு பகுதிகளும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி சேதம் அடைந்து உள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
அசம்பாவிதம் நடந்ததை அறிந்து , அவசரத் தேவைக்கு உதவி செய்யும் ஒரு குழுவினர் விரைவாக விபத்து நடைப் பெற்ற இடத்திற்கு சென்றனர்.
மற்றும் இவர்கள் அங்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு உ ள்ளனர். ரயிலில் பணிபுரியும் நபர் ஒருவரின் கூற்றுப்படி, விபத்து உள்ளான இடத்திற்க்கு உடனடியாக அவசர உதவி பொருட்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி செல்வதற்கு வாகனங்களின் குழு ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உருக்குலைந்த இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
இவ் விபத்தின் காரணமாக ,
நவாப்ஷா மற்றும் சிந்துவின் அண்டை மாவட்டங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற விபத்தின் கூடுதல் தகவல்
இவ் ரயில் விபத்து தொடர்பாக சமூக வளையத் தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களின் மூலம் அறிய வருவது என்னவெனில் : இதில் அநேக மக்கள் பயணித்ததாகவும் தெரிகிறது .
இதன் காரணமாக ,சிந்து மாகாணத்தின் உள் மாவட்டங்களுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பாக்கிஸ்தானின் ரயில்வே அமைச்சர் சாத் ரபீக் கூறுகையில், ரயில் சாதாரண வேகத்தில் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிப்பதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
உள்ளூர் ஒளிபரப்பாளரான ஜியோவின் கூற்றுப்படி, சிலர் இன்னும் ரயில் பெட்டிக்குள் சிக்கியுள்ளனர்.
விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர் பின்வருமாறு கூறுகின்றார் :
“என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, நாங்கள் உள்ளே அமர்ந்திருந்தோம்” என்று ஒரு திகைத்துப்போய் கூறினார்.
சிந்து மாகாணத்தின் தகவல் அமைச்சர் ஷர்ஜீல் மேமன் பி பி சி செய்தியிடம், அரசாங்கத்தின் முதன்மை ஆன முன்னுரிமை,
“மீட்புப் பணியாகும், நாங்கள் முழுமையாக விபத்துக்கு உள்ளானவர்களை மீட்பதிலே கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.
இதே போன்று 2 வருடங்களுக்கு முன் 2021 ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்தில் பயணித்த இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
2013 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் , இது போன்ற ரயில் விபத்துகளில் 150 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.