World

லெபனானில் வசித்து வருகின்ற இலங்கை நபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு…

லெபனானில் தொழில் புரிகின்ற மற்றும் பணிகளில் ஈடுபடுகின்றதற்காக தங்கி வாழ்கின்ற அனைத்து இலங்கை வாழ் நபர்களையும் அந் நாட்டு இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பிலே வசித்து வருகின்ற இலங்கை நபர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை இலங்கை தூதரகத்திற்கு வழங்குமாறு குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்களது தகவல்களை வழங்குவதற்கு என குறிப்பிட்ட இலக்கமும் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஒன்றும் தூதரகத்தினால் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

மற்றும் குறித்த தகவலினை கொழும்பு ஊடகம் ஒன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பின்வரும் இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி முகவரியினை தொடர்பு கொண்டு லெபனானில் வசித்து வருகின்ற இலங்கை வாழ் மக்கள் தங்களது தகவல்களினை வழங்குமாறு அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாகவே மத்திய கிழக்கு பிராந்திய வளையத்தில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது வரை பதற்ற நிலமை நீடித்து வருகின்றனையும் குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாகவே இவ்வாறு லெபனான் இல் வசித்து வருகின்ற இலங்கை வாழ் மக்களிடம் தங்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை தூதராகம் அறிவித்துள்ளது.

மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் – 70386754 அல்லது 71960810

தகவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk

Related Articles

Back to top button