சிறுவர்களை ஸ்மார்ட் போனில் இருந்து கட்டுப்படுத்த புதிய சட்டம் சீனாவில் !!
சிறுவர்களை ஸ்மார்ட் போனில் இருந்து கட்டுப்படுத்தும் சீனா…
சீனாவின் இணைய விதிகளை உருவாக்கும் குழு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை எவ்வளவு பயன்படுத்த முடியும் என்பதைக் கட்டுப்படுத்த விரும்புகிறது.
சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஆலோசனையை வழங்கியுள்ளது.
16 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் மட்டுமே தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் ஒரு விதியை உருவாக்கியுள்ளனர்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது என்று சீனா விதித்துள்ளது.
8 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 8 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும்.
சிறுவர்களை கட்டுப்படுத்தும் இப் புதிய விதியை உருவாக்க விரும்புவதாக அரசாங்கம் கூறியதும், பலர் கவலையடைந்து உள்ளனர் ,
அவ் வரிசையில் அலிபாபா மற்றும் பிலிபிலி ஆகிய இரண்டு பிரபல நிறுவனங்களின் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் அவர்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக குறைந்தது.
இதுதவிர, சீனாவில் மொபைல் போன்களுக்கான சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள் முன்பு போல் விற்பனை செய்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிரடியாக இறங்கிய சீன அரசு , சில விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மைனர் மோட் என்ற சிறப்பு கணினி நிரலை உருவாக்க விரும்புகிறது.
மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தற்போது மக்களுக்காக இச் சட்டம் பகிரப்பட்டு மக்களின் எண்ணங்களும் கேட்கப்பட்டு வருகின்றது ..
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தொலைபேசிகளை தங்கள் சொந்த தொலைபேசிகளைக் கொண்டு கட்டுப்படுத்துவதையும் இணையத்திற்கான விதிகளை உருவாக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பரிந்துரை செய்தது உடன்,
சிறுவர்களை ஸ்மார்ட் போன் உடன் வளர்ப்பதனால்…
சீன அரசு இதனை சாத்தியமாக்கப் போகிறதாக தகவல் வெளிவந்து உள்ளது . சிறுவர்கள் உங்கள் தொலைபேசியில் அதிக நேரம் செலவழித்தால், அது உண்மையில் அதிக எடை, தூங்குவதில் சிக்கல் மற்றும் சரியாக படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாதது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
தற்போது உள்ள நவீன காலத்தில் போன் இல்லாமல் வாழ்வதா என்று புலம்பும் சிரார்களையே நாம் அதிகம் காண்கிறோம் .
ஆனால் உண்மையில் இச் ஸ்மார்ட் போன் மூலம் சிறுவர்களுக்கு அதிகம் பாதிப்புகளே உள்ளன .நன்மை என்றால் அது சிறிதளவிலே உள்ளது என்றும் கூறலாம்.
சிறுவர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சமூக ஊடகம் ஒன்று தான் யூ டி ப் இதில் சார்ட்ஸ் என்ற ஒன்றும் உண்டு இதனை தான் சிறுவர்களுக்கு அதிகம் பிடிக்கும் எனலாம் ஆனால் இந்த சார்ட்ஸ் மூலம் சிறுவர்களுக்கு உரிய சிந்திக்கும் ஆற்றல் பதிப்படையுமாம் மற்றும் சிறுவயதில் இவ்வாரான ஸ்மார்ட் போன் பாவனை யால் அவர்களின் கண் பார்வை மற்றும் மூளை விருத்தியும் அதிகம் பாதிப்படையும் .
எனவே நம் குழந்தைகளை பராமரிப்பது எமது கடமையே அதனால் ஸ்மார்ட் போன் ஐ அதிகம் சிறார்களுக்கு வழங்காமல் ஸ்போர்ட்ஸ் ,டிரோவிங் , ஸ்மிங்க் போன்றவற்றில் ஈட்டுபடுத்தி சிறுவர்களின் எதிர் கால வாழ்வை வளமாக்குவோம் .