World

டேனியல் புயலினால் லிபியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!!

வடக்கு ஆப்பிரிக்காவின் லிபியாவில் டெர்னா பகுதியில் ஏற்பட்ட டேனியல் புயலின் காரணமாக கனமழை பெய்தது மற்றும் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையில் இருக்கின்ற செய்தியை தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் கனமழையினால் லிபியாவின் கடலோர பிரதேச பகுதியான டெர்னா, பெடா, சுசா ஆகிய நகரங்களில் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன்,

மேலும் அணைகள் குளங்கள் என அனைத்தும் உடைக்கப்பட்டு நீரானது பெருக்கெடுத்து வருகின்றது .

இதன் காரணமாக வெள்ளப்பெருக்கினால் பல உயிர்களை இழந்த இந்நிலையில் டேனியல் புயலின் காரணமாகவும் தற்போது ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது.

மேலும் புயலினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் மீட்பு பணியானது துரித வேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக லிபியாவின் துறைமுக நகரமான கடலோரப் பகுதியில் அமைந்துள்ள டெர்னா பகுதியே அதிகளவான சேதங்களை கொண்டுள்ளதாகவும் அங்குள்ள மக்களே அதிகம் உயிரிழந்துள்ளதாகவும்,

மேலும் இவர்களில் அதிகமானவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உலக நாடு எங்கும் பருவகால மாற்றங்களின் காரணமாக ஏற்படுகின்ற இயற்கை சீற்றங்களுக்கு நடுவில் மக்கள் பலரும் தங்கள் உடமைகளையும் உயிரினையும் இழந்து தத்தளித்து வருகின்றனர்.

அதிலும் லிபியா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் புயலின் காரணமாக அங்குள்ள மக்கள் பலரும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட தேவையான வசதிகளின்றி சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

Related Articles

Back to top button