நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்!!
பிரான்சிலிருந்து இலங்கையர்கள் 14 பேர் நாடு கடத்தப்பட்ட தகவல் ஆனது தற்போது வெளியாகி இருக்கின்றது.
இன்றைய தினம் குறித்த 14 இலங்கையர்களும் இலங்கையின் காட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்து இறங்கி இருக்கின்றனர்.
மற்றும் குறித்த பதினான்கு நபர்களும் சட்ட விரோதமான முறையில் பிரான்சில் குடியேற முற்பட்டவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந் நிலையில் அவர்கள் நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மற்றும் இந்த மாதத்தில் மாத்திரம் சட்ட விரோதமாக பிரான்ஸிற்க்கு சென்ற ஏழு இலங்கையர்களும் மேலதிகமாக தற்போது 14 இலங்கையர்களும் நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கின்றது.
மற்றும் இவ்வாறு இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுமார் 21 வயதுக்குள் 60 வயதிற்கும் இடைப்பட்ட நபர்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இவ்வாறு இலங்கை அனுப்பப்பட்ட நபர்கள் மீது மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.