மறைந்து வாழும் இலங்கையை சேர்ந்த 48 குற்றவாளிகள்!!! தீவிர விசாரணையில் புலனாய்வு அமைப்புகள்….
இலங்கை விட்டு ஏனைய வெளிநாடுகளில் மறைந்து வாழும் சுமார் 48 குற்றவாளிகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
குறித்த தகவலானது புலனாய்வு அமைப்புகளினால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் சுமார் 48 குற்றவாளிகளில் 30 பேர் இவ்வாறு போதைப்பொருள் களத்தில் நேரடியாகவோ அல்லது தரகர் மூலமாகவோ ஈடுபட்டுள்ளதாகவோ தெரிய வருகின்றது.
இதனை அடுத்து இலங்கைக்கு பிரதானமாக ஐந்து நபர்கள் நேரடியாக போதை பொருட்களைக் கொண்டு வருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது.
சார்க் நாடுகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த குற்றவாளிகளை கைது செய்வதற்கு சார்க் நாடுகள் ஒத்துழைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதற்கென துபாய் நாட்டில் பல சிறப்பு உளவாளிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இலங்கையில் அதிகரிக்கின்ற போதை பொருள் பாவனை குறைக்கும் முகமாகவே அதிரடியாக புலனாய்வு பிரிவு பிரிவினரின் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.