Srilanka News

நல்லூர் திருவிழாவில் சன நெரிசலில் சிக்கி அவதியுறும் நல்லூர் பக்தர்கள்…

யாழ்ப்பாணத்தின் அதி விசேட கோவில்களில் ஒன்றான நல்லூர் கந்த சுவாமி கோயில் இன் சுற்று வீதியானது நேற்று 12 9 2023 அன்று இடம்பெற்றுள்ளது. அதீத பக்தர்களினால் சன நெரிசலுக்கு உள்ளான அக்கோவிலில் பலரும் அவதிறும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

நல்லூர் கோவில் திருவிழா ஆனது நிறைவடைந்த இந் நிலையில் பக்தர்கள் கோயிலுள் வரவும் செல்லவும் இருப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெரிசலினால் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் இதன் காரணமாக பக்தர்கள் பலரும் மூச்சுத்திணரளுக்கு உட்பட்டுள்ளனர்.

இதனால் அவதியுற்ற பக்தர்களை சன நெரிசலில் இருந்து மீட்டெடுத்து நோயாளர் காவு வண்டிகளில் கொண்டு செல்வதற்குரிய வசதிகள் கூட சன நெரிசலினால் அற்று போய் உள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.

ஒழுங்கான பாதுகாப்பாக ஏனையவர்களுக்கு இடையூறு அளிக்காத வண்ணம் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்;

தற்போது அதனை பின்பற்றாத நிலையினால் பொதுமக்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கோயில் நிர்வாகத்தினர் இனால் ஆரம்பத்திலேயே இரும்பிலானாலும் தகடுகளால் அடைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அப்பாதை தற்போது பக்தர்களினால் உடைக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இதனை ஏதுவாக பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் பலரும் திருட்டு சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சன

இதனால் நல்லூர் கந்த சுவாமி கோவில் அருகே அதிக பொலிகள் போலீஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button