இலங்கையில் மருந்து விநியோகத்தில் நெருக்கடி.. எச்சரிக்கை சுகாதார அமைச்சர்!!
தற்போது இலங்கையில் மருந்து விநியோகத்தில் பாரிய அளவில் நெருக்கடி நிலைமை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல என்பவர் தெரிவித்துள்ளார்.
எனவே உடனடியாக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்து விநியோகத்தினை உடனடியாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சரவர் தெரிவித்து இருக்கின்றார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் மற்றும் நிறுவனங்களின் தலைவருக்கும் கடிதம் மூலம் இத் தகவலினை தெரிவித்து இருக்கின்றார் சுகாதார அமைச்சர்.
மேலும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன் பதிவுகளை உடனடியாக ரத்து செய்யுமாறு அவர் குறித்த கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
மற்றும் இது தொடர்பாக விசாரணைகள் நடத்தி வருவதாகவும் மற்றும் குறித்த விசாரணையானது நிறைவேறும் வரை உடனடியாக சகல கொடுப்பனவுகளையும் தடுத்து நிறுத்துமாறும் அமைச்சர் அவர்கள் கூறியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.