மன்னாரில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட சிகரெட்கள்!!! பலத்த பாதுகாப்பில் போலீசார்…
மன்னாரில் இன்று சட்ட விரோதமாக கடத்தி செல்லப்பட்ட ஒரு தொகையான வெளிநாட்டு சிகரெட் பெட்டியுடன் 25 வயது தான நபர் ஒருவர் போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் மன்னாருக்கு இடையிலான போக்குவரத்து பேருந்தில் இருந்தே சிகிரெட் பெட்டிகளை கடத்தி வந்த நிலையில் குறித்த இளைஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மன்னார் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் இவ்வாறு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச் சந்தேக நபரை மடக்கி பிடிப்பதற்கு என சுமார் ஒன்பது பேர் அடங்கிய குழுவானது ஏற்றப்பாடு செய்யப்பட்டு அவர்களினாலே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது .
மேலும் கைது செய்யப்பட்ட 25 வயதான நபர் ஆனவர் மன்னார் இணைச் சேர்ந்தவர் எனவும் தற்போது இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இவ்வாறு பல்வேறு விதமான சட்ட விரோத செயல்பாடுகள் இலங்கை நாட்டில் அவ்வப் போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது.
இதனால் பலத்த பாதுகாப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றும் ராணுவ வீரர்களும் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறு மன்னாரில் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமான சிகரெட்டின் எண்ணிக்கையானது சுமார் 2900 எனவும் தெரியவந்துள்ளது .
மேலும் கைப்பற்றப்பட்ட சிகிரெட்டுக்களின் இன்றைய சந்தை மதிப்பானது சுமார் ஐந்து லட்சம் ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனானவர் நீதிமன்றத்தில் சான்று பொருளுடன் ஆஜர்படுத்தப்படவும் உள்ளார்.
இவ்வாறு இலங்கையில் பல்வேறு விதமான சட்ட விரோத சம்பவங்கள் நிகழ்ந்தேறிய வண்ணம் இருக்கின்றது .
இருப்பினும் இதில் ஒரு சில சம்பவங்களை அவ்வப்போது போலீசாரினால் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படுகின்றது.