சதொசாவில் விலை குறைப்பு…. வெளியான மகிழ்ச்சி செய்தி…
இலங்கையில் காணப்படுகின்ற சதொசாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையை குறைத்து மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியினை வெளியிட்டு இருக்கின்றது. மற்றும் குறித்த விலை குறைப்பானது இன்றைய தினம் முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் இதனை அடுத்து குறித்த விலை குறைப்பானது எதிர்வரும் 31-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் எனவும் சதொச நிறுவனம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.
இந்நிலையில் சதொசாவில் குறைக்கப்பட்ட விலைகள் பின்வருமாறு;
ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியானது ரூபாய் 60 குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக ரூபாய் 275 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இறக்குமதி செய்யப்படும் டின் மீன் 425 கிராம் இன் விலையானது 55 ரூபாய் குறைக்கப்பட்டு 595 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் டின் மீனின் விலையானது (425 கிராமின்) 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 530 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற 155 கிராம் டின் மீனின் விலையானது பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூபாய் 280 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 1kg கடலை ஆனது ரூபாய் 40 இனால் குறைக்கப்பட்டு 225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் உள்ளூர் உற்பத்தியான உருளைக்கிழங்கு ஆனது ரூபாய் 15 ரூபாய் குறைக்கப்பட்டு 300 ரூபாய் வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கோதுமைமா ஒரு கிலோகிராமின் விலையானது 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 195 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
400g சதொச பால்மா ஒன்றின் விலையானது எட்டு ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக ரூபாய் 940 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடலை ஒரு கிலோ கிராமின் விலையானது ரூபாய் ஐந்து ரூபாய் நாள் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 535 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வெள்ளைநாடு கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விளையாக 207 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிகப்பு நாடு அரசி ஒரு கிலோகிராமானது ரூபாய் 2 இனால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 218 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுமார் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலையானது லங்கா சதொசா நிறுவனத்தில் விலை குறைப்பு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.