Srilanka News

நாட்டில் சிறுவர்கள் உட்பட 12 பேர் மாயம்…. தேடும் பணியில் போலீசார்… பின்னணியில் யார்?

கடந்த இரண்டு நாட்களில் இலங்கை நாட்டில் பல பகுதிகளில் சுமார் நான்கு சிறுவர்கள் உட்பட 12 நபர்கள் காணாமல் மாயமாகி உள்ளதான தகவல்கள் தற்போது இலங்கை போலீஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

இதில் நான்கு சிறுவர்களில் 2 பெண் சிறுவர்களும் அடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் பரவி இருக்கின்றது.

இந் நிலையில் காணாமல் போய் உள்ளதான சிறுவர்களில் பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தினைச் சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவனும்,

தர்மபுரம் பகுதியினைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவனும்,

மற்றும் ஹட்டனினை சேர்ந்த 16 வயதுடைய மாணவியும் அதனை தொடர்ந்து அதே பகுதியினைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரும் காணாமல் போய் உள்ளதாக தற்போது தகவல்கள் வெகுவாக சமூக வலைதளங்களில் பரவலாக பரவி காணப்படுகின்றது.

இதனை அடுத்து நுவரெலியா இனைச் சேர்ந்த 18 வயது யுவதி ஒருவரும் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும்,

எடரமுல்லையை வாசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய இளைஞரும் உட்படுகின்றதாக போலீஸ் தலைமையகம் தற்போது தெரிவித்து இருக்கின்றது.

மற்றும் வயது முதிர்ந்தவர்களில் நோர்வூட்டை சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும், மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த 75 வயது உடைய ஆணொருவரும்,

பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான வயதான கூலி தொழில் புரிகின்ற ஒருவரும் மற்றும் 65 வயது உடைய ந ஆணொருவரும் காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் குறித்த போலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் சுமார் இரண்டு நாட்களில் 12 நபர்கள் நாட்டில் காணாமல் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மற்றும் இதனை தொடர்ந்து இது தொடர்பில் இலங்கை மக்கள் சற்று அச்சத்தில் இருப்பதாகவும்,

இது குறித்து பின்னணியில் யாரேனும் செயல்படுகிறார்களா என்ற கோணத்திலும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் குறிப்பிட்ட நான்கு சிறார்களும் காணாமல் போய் உள்ளதான தகவல்கள் குறித்து அப் பிரதேச மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து ள்ளதாகவும்,

அவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றது.

இது தொடர்பில் போலீசார் தங்களது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்து இது குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்க படுகின்றதா என விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button