Srilanka News

மோதிக்கொண்ட இரு குழுக்கள்… சம்பவ இடத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்!! பதற்ற சூழ்நிலையில் இலங்கை..

தற்போது இலங்கையின் குருணாகல் மாவட்டத்தினை சேர்ந்த மாவத்தகம போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியான பிலெஸ்ஸ பகுதியில் நேற்று இரவு வேளையில் மோதிக்கொண்ட இரு குழுக்கள் தொடர்பான செய்திகள் தற்போது இலங்கை நாட்டை உலுகிக்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதனை தொடர்ந்து மூவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தங்களது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்து இருக்கின்றனர்.

அதீத சண்டையின் உச்சத்தின் காரணமாக பல வெட்டு காயங்களுக்கு உள்ளான சுமார் 28 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவ்வாறு அதே பிரதேசத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இவ்வாறு இலங்கையில் அண்மைக் காலங்களில் குழுக்கள் இடையேயான மோதல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அப் பகுதி முழுவதுமாக பாதுகாப்பு கருதி போலீசாரின் விசேட அதிரடிப் படையினர்கள் குவிக்கப்பட்டு மொதல்ல நடைபெற்ற பகுதி உள்ள மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

மற்றும் குறித்த மோதலின் போது காயமடைந்த மேலும் இருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் குறித்த மோதிக்கொண்ட இரு குழுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஜன் இற்கும் எதிர் கும்பலிற்க்கும் ஏற்கனவே முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது .

மற்றும் இதுவே நாளடைவில் பெரிய மோதலாக உருவெடுத்து ஒருவர் உயிரிழந்ததிற்கும் வழிவகுத்துள்ள ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button