கடல் மார்க்கமாக தமிழகத்தை நோக்கி தஞ்சம் புகுந்த யாழ்ப்பாண குடும்பம்… வெளியான தகவல்..
தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியை நோக்கி கடல் மார்க்கமாக மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 நபர்கள் தற்போது தனுஷ்கோடி பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறித்த செய்திகளை இந்திய செய்தி ஊடகங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. மன்னார் பகுதியில் இருந்து படகு மூலமே இவர்கள் 7 பேரும் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் அவர்கள் குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் இவர்கள் யாவரும் யாழ்ப்பாண சுழிபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .
பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே குறித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு நபர்களும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை படகோட்டிகளுக்கு கொடுத்து படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது .
இவ்வாறு கடல் மார்க்கமாக இந்தியாவில் தஞ்சம் கோரியவர்களை மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளுக்காக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்து இந்திய ஊடகங்கள் செய்தியினை வெளியிட்டுள்ளது .