இளயோர்களை இலக்கு வைக்கும் போதைபொருள் கும்பல்!!!! யாழில் கைதான போதைபொருள் விற்பனையாளர் ……
இலங்கையின் வட பகுதியான யாழ் மாவட்டத்தில் இளயோர்களை குறி வைத்து போதைபொருள் விற்பனை ஆனது அண்மைக் காலங்களில் அதிகமாக நடைபெறும் ஒன்றாக இருந்து வருகின்றது.
இதில் அதிகமாக பாடசாலை மாணவர்களிடம் இவ் விற்பனை நடவடிக்கை ஆனது இன்னும் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றது.
இச் செயற்பாடுகள் இளயோர்களை அதிகம் உள ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் மோசமான நிலைக்கு ஆளாக்குகின்ற ஒன்றாக சமூகத்தினரினால் பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் யாழில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையமாக கொண்டு போதைபொருள் விற்பனையாளர் ஒருவர் யாழ்ப்பாண பிராந்திய புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஆனவர் யாழ் தனியார் வகுப்பு இடம் பெறும் இடத்திற்கு அருகாமையில் வைத்து பேதைப்பொருளினை விற்பனை செய்வதற்கு நின்று கொண்டிருக்கும் போது கைதாகி உள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஆனவர் 33 வயதானவர் என்பது தெரிய வந்துள்ளது.
மற்றும் இவர் யாழ் குற்றத் தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தைக் நபர் கைதாகும் போது அவரிடம் 3 கிலோ 686 கிராம் எடையுள்ள மாவா என்கின்ற போதை பொருள் இருந்ததாக பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் ஆனவர் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தவுள்ளார் என தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.