தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அகில இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டு 10 அம்சங்கள் அடங்கிய அறிக்கை!!
நேற்றைய தினம் பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக தாதியர்களினால்
முன்னெடுக்கப்பட்ட்டது .
இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இலங்கை தாதியர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்படுள்ளது .
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இலங்கை தாதியர்கள் எதிர் கொண்டுள்ள சுமார் பத்து விதமான பிரச்சனைகளை முன்னெடுத்து முன்னிலைப்படுத்தி முன்வைக்கப்பட்டன.
மேலும் சுமார் இலங்கையில் 40 ஆயிரம் தாதியர்கள் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் தாதிய சேவைக்குரிய அவர்களுக்கான வாய்ப்பானது கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் தாதியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது.
மேலும் இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வேளையில் சுமார் 2815 தாதியர்கள் டிப்ளோமா பட்டதாரிகள் நியமனம் வழங்குவதற்கு பதிலாக,
வெறுமனே ஆயிரம் பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டு உள்ளதாகவும் அதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவினை தவிர்த்து ஏனைய பிரிவுகளிலிருந்து தாதிய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்குரிய ஆலோசனையை குறித்தும் அத் தீர்மானத்தை நிறுத்த கோரியும் இப் போராட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
மற்றும் தாதியர் பட்டத்தை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி தாதியர்களும் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளாமல் இது வரையில் உள்ளமை .
மேலும் தாதியர் முகாமைத்துவ துணை சேவை ஸ்தாபிக்காமை , சம்பள முரண்பாடுகள் என பல்வேறு கொடுப்பனவு பிரச்சனைகள் என்பவற்றை சுட்டிக்காட்டியே தாதியர்களினால் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .