இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… மின்சார கட்டணம் குறைப்பு!!! வெளியான அறிவிப்பு….
இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடும் மின்சார கட்டணத்தின் அதிகரிப்பானது இலங்கை மக்களுக்கு பாரியளவு பாதிப்புகளை விளைவிக்கும் வண்ணம் இருக்கின்றது.
இந் நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்குள் மின்சார கட்டணமானது குறைய அதிக வாய்ப்புள்ளதாக அமைச்சரான பிரசன்னா ரனதூங்க அவர்கள் தற்போது மக்களுக்கு நற்செய்திணை தெரிவித்துள்ளார்.
இவர் கம்பஹவில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனை குறிப்பிட்டு இருக்கின்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்;
ஒரு வருடத்திற்கு முன்னால் இலங்கை நாட்டில் என்ன நடந்தது என்று அனைவரும் அறிந்ததே. அவ் வகையில் சுமார் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இலங்கை இருந்தது.
அத்தோடு இலங்கை மக்களுக்கு எரிபொருட்களின் சிக்கல் நிலமையும் ஏற்பட்டிருந்தது.
அதே போல் அத்தியாவசியமான பொருட்களின் சிக்கல் நிலமையும் ஏற்பட்டிருந்தது தற்போது இலங்கை நாட்டினுடைய நிலைமையானது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது.
இந் நிலையில் மின்சார கட்டணத்தின் அதிகரிப்பானது மக்களுக்கு பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் குறித்த மின் கட்டணமானது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களுக்குள் குறையும் என நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இச் செய்தியை கேட்டு இலங்கை மக்கள் தற்போது மகிழ்ச்சியடைந்து வருகின்றனர் .