இலங்கையை உலுக்கிய யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் குறித்து உறவினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!
இலங்கையை உலுக்கிய யாழில் தனியார் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி குறித்து தற்போது அவரது உறவினர் வழக்கானது திசை மாறும் வகையில் ஊடகங்களுக்கு தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
பத்து நாட்களுக்கு முன்பாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட குறித்த சிறுமியானவர் தாய் தகப்பன் உடன் இன்றி தனது அம்மம்மாவுடன் ஆரம்பத்தில் இருந்து வளர்ந்ததாகவும்,
அதன் பின் ஒரு சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தகப்பனாருடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
அம்மம்மாவிற்கு தகப்பனாருடன் குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லாததனால் ஏற்பட்ட ஈகோவின் காரணமாகவே அச் குழந்தையை விசு ஊசி ஏற்றி கொன்று உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் .
மேலும் அச் சிறுமியானவர் எவ்வித உளநல பாதிப்புகளும் இல்லாதவர் எனவும்,
நன்கு படிக்கக்கூடிய மாணவியாக இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் சிறுமியானவர் தனது ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் வெற்றிகரமாக வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சாதனை படைத்தவர் எனவும் அதன் போது அவர் தெரிவித்தார்.
ஈகோவின் காரணமாகவே முழுமையாக அச்சிறுமி அம்மம்மாவினால் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
மேலும் விச ஊசி ஏற்றி கொன்றுவிட்டு சுமார் இரண்டு நாட்கள் இறந்த சிறுமியுடன் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
மேலும் இச் சிறுமி மன்னாரிலே கல்வி பயின்று வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னரே தனது தகப்பனாரின் இடத்தில் சென்று அவரின் பராமரிப்பில் சில காலங்கள் இருந்து வந்ததாகவும்,
அங்கேயும் நன்கு படித்து ஆரோக்கியமுள்ள நன்கு சுறுசுறுப்பான சிறுமியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் எவ்வித உள நோய்களும் அற்ற ஆரோக்கியமான மாணவி எனவும் அவரைப்பற்றி அவதூறாக உளநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி பொய்யானவற்றை சித்தரிக்க வேண்டாம் என அவர் ஊடக ஊடகங்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
முழுக்க முழுக்க அம்மம்மாவின் ஈகோ பிரச்சினையினாலே அவர் சிறுமி என்றும் பாராது அவளை கொன்றுள்ளார் .
இந்தச் சம்பவம் இலங்கையை முழுவதும் உலுக்கிய ஒன்றாக தற்போது காணப்படுகின்றது.
இருப்பினும் குறித்த குற்றவாளி ஆனவர் போலீசாரின் கீழ் கண்காணிப்பில் வைத்திருக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நலம் தேறிய பின்னர் விசாரணைகள் மூலம் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிய வருகின்றது.
எவ்வாறாயினும் எவ்வளவு பெரிய பிரச்சனை இருப்பினும் அதற்கு கொலையோ அல்லது தற்கொலையோ ஒரு தீர்வு இல்லை என்பதனை இதன் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் சமூகத்தில் நன்கு வளர்க்கக் கூடிய இடத்திலுள்ள குறித்த அம்மம்மா அவர்கள் செய்த இச் சம்பவம் உண்மையில் மிகவும் மன வருத்தத்திற் குரிய செயலாக குறிப் பிடப் படுகின்றது.
இதில் முக்கிய பங்காக இறந்த சிறுமியின் தாய் மற்றும் தகப்பனே காரணம் என்பதனை யாரும் மறுக்க முடியாது.
ஒன்றும் அறியாத சிறு குழந்தையை இவர்களது ஈகோ மற்றும் பிரச்சனைகளினால் கொன்று விடுகிறார்கள்.
இதற் குரிய தக்க தண்டனை குறித்த நபருக்கு வழங்கியே தீர வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.