Srilanka NewsWorld

தென்கொரியாவில் கொல்லப்பட்ட இலங்கையர் வெளியான அதிர்ச்சி தகவல்.. போலீசார் எடுத்த நடவடிக்கை!!

தென்கொரியாவில் வேலைக்கு என இலங்கையர்கள் பலர் அந் நாட்டில் சென்று வேலை செய்து வருகின்றனர்.

அவ் வகையில் தென்கொரியாவில் வேலை நிமித்தம் சென்ற இலங்கையர் ஒருவரை அவருடன் தங்கி வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றது. இக் கொலை சம்பவமானது கடந்த மூன்றாம் திகதி அளவில் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்த பி. கே. ஷெனித் துலாஜ் சதுரங்க என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மற்றும் இவர் 29 வயது நிரம்பியவர் எனவும் மற்றும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தற்போது இவரை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இதனை அடுத்து உடனடியாக விரைந்த தென் கொரியா போலீசார் சதுரங்காவை கொலை செய்த நபரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரித்த தென்கொரிய போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்,

மற்றும் சதுரங்க என்பவரின் பக்கத்து அறையில் வசித்து வந்த மற்றும் ஒரு இலங்கையரே இக் கொலை சம்பவத்தினை செய்ததாக தகவலினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் இக் கொலைக்குரிய காரணம் இதுவரையிலும் வெளிவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button