Srilanka NewsWorld

இன்று முதல் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கப்பல் சேவை தமிழர் பகுதியில் இருந்து ஆரம்பம் ……

இந்தியாவில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே கப்பல் சேவை போக்குவரத்து ஆனது இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்திய ஊடகங்களானது இது தொடர்பாக தெரிவிக்கையில்;

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று புறப்பட்டு நேற்றைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததாகவும்.

மேலும் இக் கப்பலானது இன்று ஆறாம் தேதி(06.10.2023) காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலிற்குறிய நிர்மாண பணிகள் இது வரை நிறைவு பெறவில்லை எனவும் இருப்பினும்,

ஜனவரி மாதம் முதல் வளமையாக இயங்கும் எனவும் தெரிய வருகின்றது. இதனை அடுத்து ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னராகிய இடங்களுக்கு இடையிலான கப்பல் சேவை ஆனது மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதான ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

மற்றும் நாகப்பட்டினம் – காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை காட்டிலும் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையிலான கப்பல் சேவை துரித பயணமாக அமையும் எனவும் தெரிய வருகின்றது.

இதனால் தலைமன்னார் ராமேஸ்வரம் கப்பல் சேவை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Related Articles

Back to top button