லிட்ரோ வாயுவின் விலை அதிகரிப்பு…. விசனம் தெரிவிக்கும் மக்கள்…
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையானது தற்போது செய்தியினை வெளியிட்டு மக்களுக்கு பேரிடினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந் நிலையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரான முதித பீரிஸ் அவர்கள் இது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கின்றார்;
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வட் வரியினை 18 சதவீதமாக இலங்கை அரசாங்கம் அதிகரிக்க உள்ள நிலையில் லிட்ரோ எரிவாயுவின் அதிகரிப்பு குறித்து தற்போது தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
வட் வரியின் அதிகரிப்பின் காரணமாகவே குறித்த தீர்மானமானது மிகவும் சங்கடத்துடன் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந் நிலையில் குறித்த தீர்மானமானது இதுவரையிலும் பேசப்பட்டு வருவதாகவும் நிலையான தீர்மானம் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இவ்வாறு அதிகரித்த வட் வரியின் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டின் அநேக பொருட்களுக்கு விலையேற்றப்பட இருக்கும் நிலையில் இது குறித்து மக்கள் தங்களது விசனங்களை குறிப்பிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.